ICAI CA நவம்பர் 2022 இறுதி தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – முடிவுகள் விரைவில் வெளியீடு!!

0
ICAI CA நவம்பர் 2022 இறுதி தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - முடிவுகள் விரைவில் வெளியீடு!!
ICAI CA நவம்பர் 2022 இறுதி தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - முடிவுகள் விரைவில் வெளியீடு!!
ICAI CA நவம்பர் 2022 இறுதி தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – முடிவுகள் விரைவில் வெளியீடு!!

பட்டய கணக்காளர் (CA) இடைநிலை மற்றும் இறுதி தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் காத்திருந்த நிலையில் தற்போது இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகள்

பட்டய கணக்காளர் (CA) இடைநிலை மற்றும் நவம்பர் 2022 இறுதி தேர்வுகளுக்கான அட்டவணையை இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. இந்த அட்டவணையில் அறிவிக்கப்பட்ட படி, குரூப் 1-க்கான CA Inter தேர்வு கடந்த நவம்பர் 2, 4, 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

Follow our Instagram for more Latest Updates

இதே போல், குரூப் 2-க்கான CA Inter தேர்வு கடந்த நவம்பர் 11, 13, 15 மற்றும் 17, 2022 ஆகிய தேதிகளிலும் நடத்தப்பட்டது. அத்துடன் குரூப் 1-க்கான இறுதித் தேர்வு கடந்த நவம்பர் 1, 3, 5 மற்றும் 7, 2022 ஆகிய தேதிகளிலும், குரூப் 2-க்கான தேர்வு நவம்பர் 10, 12, 14 மற்றும் 16, 2022 ஆகிய தேதிகளிலும் நடைபெற்றது. தற்போது இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் இத்தேர்வு முடிவுகள் குறித்த தகவலை ICAIவின் அதிகாரி ஒருவர் ட்விட்டர் பதிவில் கூறியதாவது, கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற இடைநிலை மற்றும் நவம்பர் 2022 இறுதி தேர்விற்கான முடிவுகள் ஜனவரி 10 முதல் 15ம் தேதிக்குள் வெளியிடப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு முடிவுகள் icai.org என்ற இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!