இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Part-time வேலைவாய்ப்பு – மாதம் ரூ.25910/- சம்பளம்!
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Part Time Doctors பணிக்கு ஆட்கள் நிரப்ப பட உள்ளனர். Part-time பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் |
பணியின் பெயர் | Part Time Doctors |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 18.10.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
HAL காலிப்பணியிடங்கள்:
Part Time Doctors பதவிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன
கல்வி தகுதி:
இந்த மத்திய அரசு பணிக்கு MBBS முடித்த விண்ணப்பதாரர்கள் Doctor பணிக்கு விண்ணப்பிக்கலாம். மருத்துவ கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
11.10.2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
HAL சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் ஊழியருக்கு அதிகபட்சமாக மாதம் ஒன்றுக்கு ரூ.25910/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
ரூ.39,000/- ஊதியத்தில் பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
தேர்வு செயல் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 18.10.2023 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.