IPL ஆட்டம் இனி வேற மாறி! வீரர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – BCCI வெளியீடு!
இந்த ஆண்டுக்கான IPL போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா பரவல் எதிரொலியாக போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த போட்டிகள் UAE யில் நடைபெற இருக்கும் நிலையில் வீரர்களுக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை BCCI வெளியிட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வரும் இந்திய பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் துவங்கி நடைபெற்று வந்தது. இதனிடையே நாடு முழுவதும் கொரோனா பேரலை தீவிரமடைந்து வந்த சமயத்தில், IPL வீரர்கள் சிலர் நோய் தாக்கத்துக்கு ஆளானார்கள். அதனால் இப்போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து நிறுத்தப்பட்ட IPL போட்டிகளை மீண்டும் நடத்த திட்டமிட்ட BCCI, போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வைத்து அக்டோபர் மாதம் முதல் நடத்துவதாக அறிவித்தது.
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ரூ.40 லட்சம் நுழைவு வரி செலுத்திய நடிகர் விஜய்!
அந்த வகையில் IPL 2021 சீசனின் மீதமுள்ள சில போட்டிகளில் அதன் விதிகளை மாற்ற முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அனைத்து IPL அணி வீரர்களுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளில், ‘IPL கிரிக்கெட் போட்டிகளில் வீரர்களால் அடிக்கப்படும் பந்துகள் ஸ்டாண்டில் அல்லது மைதானத்திற்கு வெளியே சென்றால் அந்த பந்துகள் நான்காவது நடுவரால் மாற்றி வழங்கப்படும். அடிக்கப்பட்ட பந்து சுத்திகரிப்பான்களால் சுத்தம் செய்யப்பட்ட பிறகு லைப்ரேரியில் வைக்கப்படும்’ என தெரிவித்துள்ளது.
அதாவது கிரிக்கெட் பந்துகள் தொடர்பான ஒரு புதிய அறிவியல் ஆய்வில், பந்துகளின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து மிகக் குறைவு என்று தெரிய வந்ததாலும், சீசனின் இறுதி பகுதியை முடிக்க எந்தவொரு சிக்கலையும் கையில் எடுக்க விரும்பவில்லை என BCCI தெளிவுபடுத்தியது. மேலும், போட்டிகள் நடைபெறும் அரங்கத்திற்குள் ரசிகர்களை அனுமதிப்பதற்கு வாரியம் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறாயின் பார்வையாளர்கள் மைதானத்தின் மேல் அடுக்கில் மட்டுமே உட்கார அனுமதிக்கப்படுவார்கள்.
தவிர வீரர்கள் மைதானத்தின் எந்தவொரு பக்கத்திலும் எச்சில் துப்பக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. மேலும் அழுக்கடைந்த டிஷ்யூ பேப்பரை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கை கூறுகிறது. தவிர பயோ-பபூலுக்குள் நுழைவதற்கு முன் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் மூன்று முறை பெற்றுக்கொண்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்களுடன் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இங்கிலாந்து சுற்றுப்பயணம், தென்னாப்பிரிக்காவின் இலங்கை சுற்றுப்பயணம் மற்றும் கரீபியன் பிரீமியர் லீக் முடிந்த பிறகு வீரர்கள், குழு ஊழியர்கள், வர்ணனையாளர்கள் மற்றும் ஒளிபரப்பு குழுக்கள் அந்தந்த உயிர் பாதுகாப்பு சூழலில் இருக்கும் குழு பேருந்தில் நேராக விமானத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
இதற்கிடையில் IPL வீரர்கள் கோல்ஃப் மைதானத்தை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் BCCI அதற்கும் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி வீரர்கள் அனைவரும் 24 மணி நேரத்திற்கு முன் IPL தலைமை மருத்துவ அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். அதே நேரத்தில் கோல்ஃப் கிளப்பில் இருக்கும் பார்கள், உணவகங்கள், கஃபேக்கள், உடற்பயிற்சி கூடம், லாக்கர் அறைகள் உள்ளிட்ட வேறு எந்த வசதியையும் பயன்படுத்த கூடாது. இதற்கிடையில், மைதானங்களுக்குள் பானங்களை எடுத்துச் செல்லும் மாற்று வீரர்களுக்கு, டிரிங்க்ஸ் ஹோல்டரை மைதானத்தில் வைத்திருக்க வேண்டும். அனைத்து வீரர்களும் தங்களுக்கு நியமிக்கப்பட்ட பாட்டில்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஒரு போட்டி அல்லது பயிற்சி ஆட்டத்தின் போது ஆடுகளத்தில் மக்கள் அதிகமாக காணப்பட்டால் அல்லது எந்தவொரு பார்வையாளரோ அல்லது ரசிகரோ விளையாட்டு மைதானத்தில் நுழைந்து ஒரு வீரருடன் நேரடி தொடர்பு கொள்ள முயன்றால், அந்த வீரர் தனது ஆடைகளை உடனடியாக மாற்றி, பயன்படுத்தியவற்றை கிருமி நீக்கம் மற்றும் சலவைக்காக மாற்று பையில் வைக்க வேண்டும். மேலும், பயோ-பபூலுக்குள் உள்ள மற்ற குழு உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு முன், குறைந்தது 20 விநாடிகளுக்கு சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவ வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.