WhatsApp பயனர்களின் கவனத்திற்கு – குரூப் மெசேஜ்களை படித்தவர்கள் யார்? விபரங்களை கண்டறிவது எப்படி?
WhatsApp குரூப்பில் அனுப்பப்பட்ட மெசேஜ்களை யார் யார் படித்தது என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்பது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
WhatsApp மெசேஜ்:
உலகம் நவீனமயமாகி வரும் நிலையில் மொபைல் போன் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகியுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கும் அவலம் உண்டாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் முக்கிய பங்கு வகித்து வருவது WhatsApp. உலகம் முழுவதும் அதிகமான பயனர்களை கொண்டு இயங்கி வருகிறது. சேட் செய்ய பயன்படுத்தப்படும் இந்த செயலி மூலம் பயனர்கள் புகைப்படங்கள் பரிமாறிக்கொள்ள முடியும்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கவனத்திற்கு – நவ.12ம் தேதி தேசிய திறன் கணக்கெடுப்பு!
பயனர்களுக்கு அவ்வப்போது பல்வேறு அப்டேட் வழங்கி வருகிறது WhatsApp நிறுவனம். குரூப் வீடியோ கால் செய்யும் வசதி பயனர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து WhatsApp மூலம் பணம் செலுத்தும் வசதியும் பயனர்களுக்கு வழங்கப்பட்டது. இது போன்ற பல்வேறு அப்டேட் மூலம் பயனர்களை தன்வயப்படுத்தி வருகிறது WhatsApp. பயனர்கள் WhatsApp-ல் குரூப் தொடங்கி சேட் செய்து வருகின்றனர். அவ்வாறு குரூப்பில் அனுப்பப்படும் மெசேஜ்களை யார் யார் பார்த்துள்ளார்கள் என்பதை அறிவது எப்படி என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குரூப்பில் அனுப்பப்பட்ட மெசேஜ் படித்தவர்கள் யார் என்பதை எவ்வாறு கண்டறிவது?
- பயனர்கள் முதலில் WhatsApp அக்கவுண்டை திறக்க வேண்டும்.
- அதன் பின் மெசேஜ் அனுப்பிய குரூப்பை திறக்க வேண்டும்.
- அதனை தொடர்ந்து அனுப்பிய செய்தியை நீண்ட நேரம் அழுத்தி பிடிக்க வேண்டும்.
- பின் மேலே உள்ள மெனுவை கிளிக் செய்து அதில் தகவல் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- தற்போது மெசேஜ் படித்தவர்களின் பட்டியல் மற்றும் மெசேஜ் யாருக்கெல்லாம் சென்றடைந்தது என்பது குறித்த விவரங்கள் திரையில் தோன்றும்.