Home news அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கவனத்திற்கு – நவ.12ம் தேதி தேசிய திறன் கணக்கெடுப்பு!

அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கவனத்திற்கு – நவ.12ம் தேதி தேசிய திறன் கணக்கெடுப்பு!

0
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கவனத்திற்கு – நவ.12ம் தேதி தேசிய திறன் கணக்கெடுப்பு!
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கவனத்திற்கு - நவ.12ம் தேதி தேசிய திறன் கணக்கெடுப்பு!
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கவனத்திற்கு – நவ.12ம் தேதி தேசிய திறன் கணக்கெடுப்பு!

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடும் வகையில் தேசிய திறன் கணக்கெடுப்பு ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகத்தால் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடத்தப்படும்.

தேசிய திறன் கணக்கெடுப்பு:

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளி மாணவர்களிடையே கற்றல் திறனை மதிப்பிடும் வகையில் தேசிய திறன் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பானது அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்படும். மேலும் இந்த கணக்கெடுப்பானது 3, 5 8 மற்றும் 10 வகுப்பு மாணவர்களிடையே நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

தமிழகத்தில் இன்று முதல் இலவசம் – முதல்வர் போட்ட சூப்பர் உத்தரவு!

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதனால் பள்ளிகள் அனைத்தும் கடந்த நவ.8 ம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து இந்த வருடத்திற்கான தேசிய திறன் கணக்கெடுப்பு வரும் நவ.12 ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மத்தியக் கல்வி அமைச்சகம் இந்த கணக்கெடுப்பை நடத்தும் வழிமுறைகளையும், கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய பள்ளிகளின் பட்டியலையும் ஏற்கெனவே அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவு – 72,20,454 பேர் காத்திருப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்!

அதன் அடிப்படையில் புதுச்சேரியில் இந்த தேசியத் திறன் கணக்கெடுப்பு 313 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 14,749 மாணவ, மாணவிகளிடம் நடத்தப்பட உள்ளது. மேலும் இந்தக் கணக்கெடுப்பு புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் நடக்கும் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் கனமழை காரணமாக அன்றைய தினம் விடுமுறை அறிவித்தாலும் தேசியக் கணக்கெடுப்புக்குத் தேர்வான பள்ளிகள் மட்டும் இயங்கும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here