TNPSC குரூப் 2 & 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – தமிழ்மொழி பாடத்தில் 40 மதிப்பெண் கட்டாயம்!

0
TNPSC குரூப் 2 & 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு - தமிழ்மொழி பாடத்தில் 40 மதிப்பெண் கட்டாயம்!
TNPSC குரூப் 2 & 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு - தமிழ்மொழி பாடத்தில் 40 மதிப்பெண் கட்டாயம்!
TNPSC குரூப் 2 & 4 VAO தேர்வர்கள் கவனத்திற்கு – தமிழ்மொழி பாடத்தில் 40 மதிப்பெண் கட்டாயம்!

தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு TNPSC தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.

TNPSC தேர்வு:

தமிழக அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு TNPSC தேர்வு வாரியத்தால் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகள் நடத்துவதற்கான அறிவிப்பு வரும் மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பெரும்பாலானோர் இந்த தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி வரும் நிலையில் தமிழக அரசு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.

CBSE 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பருவத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

அதாவது TNPSC தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி முதல் பகுதியில் தமிழ் மொழிப்பாட வினாக்கள் மட்டும் இடம்பெறும் என்றும், அவற்றில் 40% மதிப்பெண் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் இத்தகைய அறிவிப்பு குறித்து முழு விபரங்களையும் இந்த பதிவில் பின்வருமாறு காணலாம்.

குரூப் 2 தேர்வு விபரங்கள்:

பதவிகள்:

இந்த குரூப் 2 தேர்வில் நேர்முகத்தேர்வு மூலம் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

நேர்முகத்தேர்வு இல்லாமல் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் TNPSC தனிப்பட்ட எழுத்தர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்பட்டு வருகின்றன.

வயது வரம்பு: பொது பிரிவினருக்கு 20 முதல் 30 வயது வரை ஆகும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 40 வயதுவரை தளர்வுகள் உண்டு. சில பதவிகளுக்கு குறைந்தபட்ச வயது தகுதி மாறுபடும்.

தேர்வு முறை:

முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகள் கொண்ட தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித்தேர்வு முதன்மை தேர்வுடன் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வாக அமைக்கப்படும். முதன்மை எழுத்து தேர்வானது மொழிப் பெயர்த்தல், சுருக்கி வரைதல், பொருள் உணர்திறன், சுருக்க குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல், கடிதம் வரைதல் மற்றும் கட்டுரை வரைதல் உள்ளிட்ட தலைப்புகளை கொண்டதாக இருக்கும். இந்த தேர்வு 100 மதிப்பெண் கொண்ட தேர்வுகளாக நடத்தப்படும். அதில் 40 மதிப்பெண் கட்டாயம் எடுத்தால் மட்டுமே பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்படும்.

குரூப் 4 தேர்வு விபரங்கள்:

பதவிகள்:

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரி தண்டல் அதிகாரி, நில அளவர், வரைவாளர்.

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் குரூப் 4 தேர்வு எழுதலாம். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

தேர்வு முறை:

குரூப் 4 தேர்வில் விருப்ப மொழிப்பாட பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆங்கில மொழிபாட பிரிவு நீக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் முதல் பகுதியில் முற்றிலும் 10ம் வகுப்பு தரத்தில் தமிழ்மொழிபாட வினாக்கள் இடம்பெறும். அதில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பிற பகுதி மதிப்பீடு செய்யப்படும். மேலும் இந்த தகுதித்தேர்வு மதிப்பெண் மொத்த மதிப்பெண்களின் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!