சிங்கார சென்னையை மேம்படுத்தும் அசத்தல் பட்ஜெட் – முக்கிய அறிவிப்புகள்!

0
சிங்கார சென்னையை மேம்படுத்தும் அசத்தல் பட்ஜெட் - முக்கிய அறிவிப்புகள்!

இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி வரும் நிதியாண்டின் பட்ஜெட் தாக்கலில் மாணவர்கள் மற்றும் பெண்களின் நலனுக்காக சூப்பர் திட்டங்களை செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னை பட்ஜெட்:

சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா அவர்கள் 2024 – 25 ஆம் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கூட்டத்தொடரை இன்று நடத்தியுள்ளார். இதில் 82 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க 61 லட்சம் நிதி ஒதுக்கீடு, திறமையான மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு STEM பயிற்சி வழங்க ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு, குறிப்பிட்ட பள்ளிகளை தேர்வு செய்து பச்சை வண்ண பலகைகளை வழங்க ரூபாய் 92.95 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சைதாப்பேட்டை மருத்துவமனையில் கூடுதல் வசதிகளுக்காக ரூபாய் 7 கோடி நிதி ஒதுக்கீடும், 200 வார்டு உறுப்பினர்களுக்கும் டேப் வழங்குவதற்கு ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு – முதல்வர் முடிவு!

இதேபோல சென்னை பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் மாணவர்களின் வருகை பதிவை 95 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தும்  பள்ளிகளுக்கு “EXCELLENT SCHOOL’  என்று பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களின் கீழ் சாலைகள், நடைபாதைகள் மேம்படுத்தும் பணிக்கு ரூபாய் 44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!