கடன் தவணை EMI செலுத்த கால அவகாசம் வழங்குதல் – உச்ச நீதிமன்றம் மறுப்பு!

11
கடன் தவணை EMI செலுத்த கால அவகாசம் வழங்குதல் - உச்ச நீதிமன்றம் மறுப்பு!
கடன் தவணை EMI செலுத்த கால அவகாசம் வழங்குதல் - உச்ச நீதிமன்றம் மறுப்பு!
கடன் தவணை EMI செலுத்த கால அவகாசம் வழங்குதல் – உச்ச நீதிமன்றம் மறுப்பு!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கடன் தவணை செலுத்துவதற்கு புதிய கால அவகாசம் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

கடன் தவணை:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை – கடனுக்கு குறைந்த வட்டி வீதம்!

கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய முழு ஊரடங்கின் போது கடன் தவணை செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. அதே போல இந்த ஆண்டும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடன் தவணை செலுத்த அவகாசம் வழங்கப்பட வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் கொரோனா இரண்டாம் அலையை காரணம் காட்டி கடன் தவணை செலுத்த கால அவகாசம் வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

11 COMMENTS

  1. கால அவகாசம் கொடுக்க முடியாது என்றால் ஊரடங்கும் நிறுத்தவேண்டும் பொய்யான குரோனா நாடகத்தை நிறுத்த வேண்டும் அதற்கு ஆர்டர் போட வேண்டும்

  2. Whether judges goes to the court Or not they will get their salaries on time, why will they bother about a common man’s struggles !

  3. மனிதர்கள் நீதிமன்றத்தை நம்புகிறார்கள், இந்த நீதிமன்றமோ மனிதர்களை தற்கொலைக்கு தூண்டுவதாக இருக்கிறது, ஒவ்வொரு மனிதனும் கடன் வாங்குகிறது அவன் குடும்பத்தின் சூழ்நிலையை பொருத்து தான், எதற்காக நான் திருப்பி கட்டுவேன் என்பதற்காகத்தான், என்னால முடியும் என்பதற்காகத்தான், ஆனால் இயற்கையும், செயற்கையும் சிறிது காலம் மனிதனின் வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது, அந்த சூழ்நிலையில் கடன் வாங்கியவர்கள் எவ்வாறு திருப்பி செலுத்த முடியும், சென்ற வருடம் காலதாமதம் கொடுத்த, நீதிமன்றம் இப்போ ஏன் கொடுக்க தயங்குகிறது, நாங்க எல்லாம் உங்களை நம்பித்தான் இருக்கிறோம் , 2 லட்சம் மூன்று லட்சம் கடன் வாங்கிய நாங்கள் திருப்பி செலுத்த முடியவில்லை, வட்டிக்கு மேல் வட்டி போடுகிறார்கள், அனைவரும் நீதியை தான் நம்பி இருக்கிறார்கள், நீதியே மக்களுக்கு நம்பிக்கை தரவில்லை என்றால் இந்த உலகத்தில் வாழ்வது நியாயமில்லை, நீதியோ,அரசாங்கமோ மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமே தவிர மக்களை கேள்வி குறியாக்கி நடுத்தெருவில் நிற்க வைப்பது ஞாயம் இல்லை.

  4. மீதி அரசர்களுக்கு சம்பளம் அதிகமாக வரும் போல அதனால் தான் மக்களின் நிலைமையை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார் இவர் குறுக்கு வழியில் வந்தவர் போல் தெரிகிறது

  5. அரசு ஊரடங்கு மட்டும் தான் போடும் மானியமும் சலுகைகளையும் தர முடியதா அரசு ஊரடங்கை மட்டும் ஏன் திணிக்க வோண்டும்.கோரோனாவால் 10 பேர் இறக்கிறார்கள் என்றால் கடன் தொகையை கட்ட முடியாமல் நாடோ தவிக்கிறது இதை பற்றி அரசுக்கு எந்த கவலையும் இல்லை!

  6. Credit card கடன்களை
    தயவுசெய்து தள்ளுபடி
    செய்யுங்கள் இந்த கோரானா காலத்தில்
    வேலை தாருங்கள்

  7. ஆம் ஊரடங்கை நிறுத்தி வேலை இல்லனந்தோறுக்கு திரும்பி வேலை ஏற்படுத்தி தாருங்கள் அப்புறம் ஏன் அவகாசம் கேக்கப்போறாங்க?

  8. ஆட்சி நிலை

    வாழத் தெரியாதோர் பெரும்பாலோர் வாழ்நாட்டில்,

    ஆளத்தெரியாதோர் ஆட்சியே நடைபெறும்.

    கோழை, கயவர் கொலைஞர், தடியர்கள்

    ஏழை, நோயுற்றோர் எங்குமே காட்சியாம்.

    • சாவு பஞ்சம் அதுவே
      சாட்சியாம்.
      நீதி நேர்மை ஏதும் இல்லை
      இந்நாட்டில்,
      வாழ்வதா சாவதா,
      அதுவே கேள்வியாம்

  9. சாவு பஞ்சம் அதுவே
    சாட்சியாம்.
    நீதி நேர்மை ஏதும் இல்லை
    இந்நாட்டில்,
    வாழ்வதா சாவதா,
    அதுவே கேள்வியாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!