மதுரையில் தேர்வில்லாமல் அரசு வேலை – ரூ.15,000/- சம்பளம்
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் OT Technician பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் இப்போது பெறப்பட்டு வருகிறது. எனவே விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Government Rajaji Hospital |
பணியின் பெயர் | OT Technician |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அரசு இராசாசி மருத்துவமனை பணியிடம்:
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் தற்போது OT Technician பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
OT Technician கல்வி தகுதி:
விண்ணப்பதாரர் Diploma in OT Technician படிப்பை அரசு மருத்துவ கல்வி நிலையங்கள் அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
OT Technician சம்பளம்:
OT Technician பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.15,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
GRH தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
GRH விண்ணப்பிக்கும் விதம்:
விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 31.3.2022 இறுதி நாள் மாலை 5.45 மணிக்குள் தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
தபால் செய்ய வேண்டிய முகவரி:
முதல்வர்,
அரசு இராசாசி மருத்துவமனை,
மதுரை – 20.
பிரிவு பொது – 8 (G8).