அரசு வேலை உங்களது கனவா..? அப்போ இந்த செய்தியை படிக்கலைனா இழப்பு உங்களுக்கு தான்!

0
அரசு வேலை உங்களது கனவா..? அப்போ இந்த செய்தியை படிக்கலைனா இழப்பு உங்களுக்கு தான்!
அரசு வேலை உங்களது கனவா..? அப்போ இந்த செய்தியை படிக்கலைனா இழப்பு உங்களுக்கு தான்!
அரசு வேலை உங்களது கனவா..? அப்போ இந்த செய்தியை படிக்கலைனா இழப்பு உங்களுக்கு தான்!

தமிழகத்தில் அரசு வேலை வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பல இளைஞர்களுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியான வண்ணம் இருக்கிறது. அந்த தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. அது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள்:

தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், அந்த பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியான வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி அதிகாரி, ஐபிபிஎஸ் புரொபேஷனரி அதிகாரி, எஸ்பிஐ இளநிலை அசோசியேட் என ஏகப்பட்ட போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அந்த போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை பல தனியார் நிறுவனங்கள் கொடுத்து வருகிறது.

அதற்காக ஆயிரக்கணக்கில் பணம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் திறமையும் தகுதியும் இருக்கும் ஏழை எளிய மாணவர்கள், அந்த அளவு பணம் கொடுத்து படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நூலகங்களில் பயிற்சி வகுப்புகள்:

பொது நூலக இயக்ககத்தின் கீழ் எல்லா மாவட்டத்திலும் மைய நூலகம், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நூலகங்களில் போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள மாவட்ட மைய நூலக அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும்.

Exams Daily Mobile App Download

வீட்டுலயே இருங்க மக்களே! கனமழை எதிரொலி.. மாநிலத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

உயர்கல்வி நிறுவனங்களில் பயிற்சி வகுப்புகள்:

அண்ணா பல்கலைக்கழக வளாகம், அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் போட்டித் தேர்வு குறித்த இலவச வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. உயர்கல்வி மாணவர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு/தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் இலவச பயிற்சி வகுப்புகள் குறித்து கேட்டு தெரிந்து கொள்ளலாம் .

tamilnaducareerservices போர்ட்டல்: 

tamilnaducareerservices என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தொடங்கி இருக்கிறது. அதில் டிஎன்பிஎஸ்சி, ஐபிபிஎஸ்,போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பொது அறிவுத் தொகுப்புகள், பாடக் குறிப்புகள், காணொளி காட்சிப் பதிவுகள், ஒலிப்பதவிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த இணைய தளத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். விருப்பம் உள்ள மாணவர்கள் இதில் பதிவு செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!