Google, Amazon வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ் – அச்சத்தில் இருக்கும் ஊழியர்கள்!!

0
Google, Amazon வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ் - அச்சத்தில் இருக்கும் ஊழியர்கள்!!
Google, Amazon வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ் - அச்சத்தில் இருக்கும் ஊழியர்கள்!!
Google, Amazon வெளியிட்ட ஷாக்கிங் நியூஸ் – அச்சத்தில் இருக்கும் ஊழியர்கள்!!

உலகம் முழுவதும் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இந்த நிலையில் அமேசான், கூகுள் ஆகியவை மிகப்பெரிய பணிநீக்க அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பணி நீக்கம்

உலகில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சியை தக்க வைத்து கொள்ள பணி நீக்கம் செய்து வருகின்றன. ஆனாலும் தற்போது டெக் நிறுவனங்களின் வருவாய் மேம்படவில்லை. இந்த நிலையில் Google, Amazon ஆகிய இரு முன்னணி நிறுவனங்கள் மேலும் கூடுதலாக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Amazon நிறுவனம் ஏற்கனவே 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் தலைமை நிர்வாக அதிகாரி கூறியிருப்பதாவது, நிறுவனத்தில் 10000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என கணக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் அடுத்த சில மாதங்களுக்கு பணி நீக்க செயல்முறை தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி 10000 ஊழியர்களுக்கு பதிலாக 20000 ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் 2023ம் ஆண்டில் குறைந்தபட்சம் 6 மாதம் வரை பணி நீக்கம் தொடரும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – நேர்முகத்தேர்விற்கு இந்த ஆவணங்கள் கட்டாயம்!

Exams Daily Mobile App Download

இதே போன்று Google நிறுவனத்தின் தாய் நிறுவனமானஆல்பபெட் நிறுவனமும் மொத்த ஊழியர்களில் 6% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி 10000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதே போல் Google நிறுவனமும் 2023ம் ஆண்டு தொடக்கத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!