சென்னையில் அதிரடியாய் குறைந்த தங்கத்தின் விலை – மகிழ்ச்சி வெள்ளத்தில் பொதுமக்கள்!
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் தற்போது சவரனுக்கு ரூ.80 குறைந்திருக்கிறது. இதனால் மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாகவே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது, இந்த இரண்டு நாட்களில் மட்டுமே ஆயிரம் ரூபாய்க்கும் மேல் தங்கத்தின் விலை உயர்ந்து தற்போது ரூ.44,000க்கும் மேல் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5580 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44,640 க்கு விற்பனை செய்யப்பட்டது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம்? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில்!
நேற்றைய தங்கத்தின் விலையுடன் ஒப்பிடும் போது இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்திருக்கிறது. அதாவது, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.5570 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்து ரூ.44,560 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 காசுகள் உயர்ந்து ரூ.74.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை மீண்டும் குறைய துவங்கியதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Exams Daily Mobile App Download