தொடர்ந்து 5 நாட்களுக்கு பிறகு சற்று குறைந்த தங்கம் விலை – நிம்மதி மூச்சு விடும் நகைப்பிரியர்கள்!
ஏப்ரல் மாதம் தொடங்கிய முதலில் தங்கம் விலை யாரும் எதிர்பாராத உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வந்தது. தற்போது ஐந்து நாட்களாக வரலாறு காணாத உச்சத்தில் இருந்த தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு ரூபாய் 25 குறைந்துள்ளது.
தங்கம் விலை:
சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி 22 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 80 உயர்ந்து ரூ.6805 க்கும், ஒரு சவரன் ரூபாய் 640 உயர்ந்து ₹54,440க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ரூபாய் 25 குறைந்து 6,780க்கும், ஒரு சவரன் ரூபாய் 200 குறைந்து ரூ.54,240 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு வரும் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 7250 க்கும் ஒரு சவரன் 58,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சென்னையில் வெள்ளி கிராமுக்கு ரூபாய் ஒன்று குறைந்து ரூபாய் 89 க்கும் ஒரு கிலோ ரூ.89,000 விற்பனை செய்யப்படுகிறது.