தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – பொதுமக்கள் முக்கிய கோரிக்கை!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - பொதுமக்கள் முக்கிய கோரிக்கை!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - பொதுமக்கள் முக்கிய கோரிக்கை!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – பொதுமக்கள் முக்கிய கோரிக்கை!

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை தொடர்ந்து நகைகளை திருப்பி தரும் படி வங்கிகளில் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகள் எப்போது கிடைக்கும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்களிடம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவு அதிமுக அரசின் ஆட்சியின் போது வழங்கிய நகைக்கடனில் முறைகேடு நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

சமீபத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக 16 லட்சம் பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அரசாணை வெளியானதை தொடர்ந்து கடன்தாரர்கள் நகைகளை திரும்ப தரக்கோரி அதிகாரிகளிடம் முறையிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வங்கிப் பணிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

LIC அசத்தல் சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.29 சேமித்தால் ரூ.3.97 லட்சம் ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!

அதனை தொடர்ந்து நகைகள் எப்போது வழங்கப்படும் எனபது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகைகளை வழங்க உத்தரவிடப்படாத நிலையில் நகைகளை வழங்க முடியாது என்றும் நகைகளை எப்போது வழங்குவது என்பது குறித்த விவரங்களை தமிழக அரசு விரைந்து வழங்கவேண்டும் என வாங்கி அதிகாரி கூறியுள்ளார். நகைக்கடன் முறைகேடு குறித்த ஆய்வுகள் நடந்து வருவதாகவும் பயானளிகள் தேர்வு பணி முடிந்ததும் நகைகள் வழங்கப்படும் என கூட்டுறவு துறை அதிகாரி கோரியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!