தமிழகத்தில் 9 – 12ம் வகுப்புகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை – பட்டதாரி ஆசிரியர் கழகம்!
தமிழகத்தில் 9ம் முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் வரும் சனிக்கிழமை (16.10.2021) விடுமுறை அளிக்க கோரி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களை சந்தித்து கோரிக்கை ஒன்றினை மனு அளித்துள்ளார்.
விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா ஓரளவு குறைந்த நிலையில் வெகு நாட்களுக்கு பிறகு முதல் கட்டமாக 9 -12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக 1 – 8 வரை உள்ள மாணவர்களுக்கும் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலாண்டு & அரையாண்டு தேர்வுகள் நடைபெறாது. கட்டாயம் இந்தாண்டு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
இந்த நிலையில் தமிழகத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய பண்டிகைகள் வரவுள்ளதால் பண்டிகை நாளான வியாழன் (14.10.2021) வெள்ளி(15.10.2021) ஆகிய இரு தினங்களும் அரசு விடுமுறை என்பதால் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொற்று பரவலால் 5 மாதங்களுக்கும் மேலாக விடுமுறை அளிக்கப்பட்டிருத்தந்தால் தற்போது பள்ளிகள் சனிக்கிழமை விடுமுறை இன்றி வாரத்தில் 6 நாட்களும் இயங்குகிறது. தற்போது பூஜை தினங்களை முன்னிட்டு வியாழன், வெள்ளி தொடர் விடுமுறைகளுக்கிடையில் அந்த 16.10.2021 சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாளாக உள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிப்பு – முதல்வர் இன்று ஆலோசனை!
தொடர் விடுமுறை என்பதால் மாணவர்களுடைய வருகையும் கணிசமாக குறைந்துவிடும் மற்றும் ஏராளமான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவார்கள். இடையில் வருகின்ற அந்த ஒரு நாளுக்கு அதாவது 16.10.2021 சனிக்கிழமைக்கும் சேர்த்து விடுமுறை வழங்கினால் ஆசிரியர் பெருமக்களுக்கும் , மாணவ செல்வங்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும். ஆகவே அருள்கூர்ந்து எங்களின் இந்த நியானமான கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து 16.10.2021 சனிக்கிழமைக்கும் சேர்த்து விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றினை அளித்துள்ளார்.