மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதார அமைச்சர் விளக்கம்!

0
மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதார அமைச்சர் விளக்கம்!
மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதார அமைச்சர் விளக்கம்!
மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதார அமைச்சர் விளக்கம்!

தெலுங்கானா மாநிலம் முழுவதும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு பெருகி வரும் சூழலில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பில்லை என்று சுகாதார அமைச்சர் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

முழு ஊரடங்கு

மாநிலம் முழுவதும் கொரோனா புதிய வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதனை கட்டுப்படுத்தும் விதமாக தெலுங்கானா மாநில அமைச்சரவை ஆலோசனை கூட்டம் கடந்த ஜனவரி 16ம் தேதி நடைபெற்றது. முதல்வர் சந்திரசேகர் ராவின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தெலுங்கானாவின் தற்போதைய தொற்றுநோய் நிலவரம் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து அமைச்சரவை விவாதம் செய்தது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து தெலுங்கானா மாநிலம் கொரோனா நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

நாடு முழுவதும் குறையும் கொரோனா பாதிப்பு – பலன் கொடுக்கிறதா ஊரடங்கு? வெளியான அறிக்கை!

என்றாலும் மக்கள் குழுக்களாக கூடாமல் வைரஸைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும் என்றும் அரசு தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது. அதே நேரத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து துறைகளை ஒருங்கிணைத்து தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துமாறு சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நோக்கத்திற்காக அனைத்து மாவட்ட அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்கள் மறுஆய்வுக் கூட்டங்களை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் நாளை (ஜன.19) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதற்கிடையில் தெலுங்கானாவில் கொரோனா தொற்று வழக்குகள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், மருத்துவக் கல்லூரிகள் தவிர தனியார், உதவி பெறும் மற்றும் அரசு ஆகிய அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் ஜனவரி 30ஆம் தேதி வரை விடுமுறையை மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இப்போது கொரோனா வைரஸின் முந்தைய அறிக்கைகள் பகுதி ஊரடங்கு அல்லது பிற புதிய தடைகள் அறிவிக்கப்படுவதற்கு சாத்தியம் என்று அரசு சுட்டிக்காட்டியிருந்தாலும், இதுவரை அத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பதால் அம்மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்பில்லை எனும் தகவல்கள் உறுதியாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here