இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (FSSAI) 233 காலிப்பணியிடங்கள் – தேர்வு தேதி ஒத்திவைப்பு !

0
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (FSSAI) 233 காலிப்பணியிடங்கள்
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (FSSAI) 233 காலிப்பணியிடங்கள்

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (FSSAI) 233 காலிப்பணியிடங்கள் – தேர்வு தேதி ஒத்திவைப்பு !

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது Food Analyst, Technical Officer, Central Food Safety Officer (CFSO), Assistant Manager (IT), Assistant Manager, Assistant, Hindi Translator, Personal Assistant, IT Assistant மற்றும் Junior Assistant Grade- 1 காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த செப்டம்பர் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
FSSAI தேர்வு தேதி ஒத்திவைப்பு:

மேற்கண்ட இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 233 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பிக்க பதிவானது 12.11.2021 அன்று முடிவடைந்தது. இந்த பணிகளுக்கு விண்ணப்பதார்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட இருந்தனர். இந்த தேர்வுகள் 17.01.2022 முதல் 20.01.2022 வரை நடைபெற இருந்தது.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா மற்றும் புதிய வகை ஓமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மருத்துவ அதிகாரிகளுடன் தடுப்பு பணிகள் குறித்து கலந்தாலோசித்து புதிய கட்டுப்பாடுகளையும் ஊரங்குகளையும் அந்த அந்த மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு மற்றும் வார ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre – Join Now

இந்த சூழ்நிலைகள் மற்றும் தேர்வர்கள் படும் சிரமம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்த மாதம் நடைபெற இருந்த தேர்வை தேதி குறிப்பிடாமல் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள அறிவிப்பை அணுகவும்.

Download Official Notice PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!