தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இலவச மிக்சி – நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

0
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இலவச மிக்சி - நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இலவச மிக்சி - நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இலவச மிக்சி – நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருவதையொட்டி, நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் வசிக்கும் மக்கள் தடுப்பூசி போட்டு கொண்டால் மிக்சி இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மிக்சி இலவசம்

கொரோனா பேரலைக்கு மத்தியில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் அதி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் கோவிஷீல்ட்  மற்றும் கோவாக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் இன்னும் தயக்கம் காட்டி வரும் நிலையில், அதற்கேற்றவாறு விழிப்புணர்வும் கொடுக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகத்தில்‌ வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

அந்த வகையில் தடுப்பூசி பயத்தை மக்களிடம் இருந்து நீக்குவதற்காக அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள மருதூர் வடக்கு ஊராட்சியில், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் மிக்சி வழங்கப்படும் என்றதொரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ராதிகாவிற்கு சேலை வாங்க அழைத்து செல்லும் கோபி, இருவரையும் பார்த்துவிடும் செல்வி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட நபர்கள் முன் வந்து ஒரே நாளில் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். மேலும் அறிவிப்பை தொடர்ந்து, மலர் என்ற பெண்ணுக்கு குலுக்கல் முறையில் மிக்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா, ஒன்றிய கவுன்சிலர் இராசேந்திரகுமார், தேர்தெடுக்கப்பட்ட நபருக்கு மிக்சி வழங்கினர். தவிர சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!