பொதுத்தேர்வு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு – அட்டவணை வெளியீடு!

0
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு - அட்டவணை வெளியீடு!
பொதுத்தேர்வு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு – அட்டவணை வெளியீடு!

தமிழகத்தின் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை குறித்த தகவல்கள் சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருப்புதல் தேர்வுகள்:

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த மூன்று வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வுக்கு பின்னர் ஜனவரி மாதம் முதல் பொதுத் தேர்வுக்கு முன்னர் வரை மூன்று திருப்புதல் தேர்வுகள் முழு பாடத்திட்டங்களுக்கும் நடத்தப்படும். திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுவதன் மூலம் மாணவர்கள் தேர்வு குறித்த அச்சம் நீங்கி மிகவும் தன்னம்பிக்கையுடன் பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியும்.

மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வை எழுதி முடிப்பதற்கான பயிற்சியும் கிடைக்கும். இந்நிலையில் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்டத்தின் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கும் முக்கிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும், தனியார், உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு அட்டவணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி தேர்வுகள் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அட்டவணையின் படி ஜனவரி 9ம் தேதி முதல் 24ம் தேதி வரை முதல் திருப்புதல் தேர்வுகள் பிற்பகல் 1:30 மணி முதல் 4:45 மணி வரை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!