தொலைந்து போன உங்கள் பான் நம்பரை ஆதார் மூலம் கண்டுபிடிக்கலாம் தெரியுமா? – வழிமுறைகள் இதோ!
மத்திய நிதி அமைச்சகம் பான் அட்டை குறித்து பல்வேறு புதிய அறிவுறுத்தல்களை அடிக்கடி வெளியிட்டு வரும் நிலையில், உங்கள் பான் அட்டை தொலைந்து விட்டால் பான் எண்ணை ஆதார் மூலம் எவ்வாறு அறியலாம் என இப்பதிவில் காணலாம்.
பான் அட்டை:
இந்திய குடிமக்கள் அனைவரும் வருமானம் தொடர்பான அனைத்து விவரங்களுக்கும் பான் அட்டையின் மூலம் தான் செயல்பாட்டை செய்ய வேண்டும். பான் இல்லை என்றால் வங்கியில் பண பரிவர்த்தனை கூட செய்ய முடியாது. நமது வருமான வரி தாக்குதல் மற்றும் ரிட்டர்ன்ஸ் முதல் அன்றாட அனைத்து பயன்பாட்டிற்கும் பான் கார்டு அவசியம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பான் எண்ணை அல்லது அட்டையை தொலைத்து விட்டால், அதனை ஆதார் மூலம் மீண்டும் தெரிந்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Google கொண்டு வந்துள்ள சூப்பர் அம்சம் – ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ்!!
Exams Daily Mobile App Download
வழிமுறைகள்:
- முதலில், https://tamilanpan.in/portallogin/register.php என்ற இணையதளத்திற்கு சென்று, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், மாநிலம், ஆதார் எண், இமெயில் ஐடி போன்றவற்றை கொடுத்து register செய்து கொள்ள வேண்டும். இதற்கு உங்கள் தொலைபேசி எண்ணிற்கு வரும் OTP ஐ பதிவு செய்தால் தான் REGISTRATION செய்ய முடியும்.
- பின்னர், நமது பான் எண்ணை கண்டுபிடிக்க https://tamilanpan.in/portallogin/login.php இணையதளத்திற்கு சென்று LOGIN செய்து கொள்ள வேண்டும்.
- அதில், DASHBOARD பகுதியில் PAN FIND MANAGEMENT என்பதை கிளிக் செய்யும் போது, அதில், PAN FIND NEW என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்பொழுது, வரும் திரையில், ஆதார் அட்டையில் உள்ளது போல், உங்கள் பெயர், பிறந்த தேதி, ஆதார் நம்பர் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.
- இதற்காக நாம் 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.
- இந்த கட்டணத்தை நாம் அதில், கொடுக்கப்பட்டிருக்கும் ஆன்லைன் முறையில் செலுத்திக் கொள்ளலாம்.
- பின்னர், SUBMIT கொடுக்கும் போது வரும் திரையில், உங்கள் பான் விவரங்கள் அனைத்தும் காண்பிக்கப்படும்.