வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கவனத்திற்கு, அரசு வழங்கும் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் உதவி தொகை வழங்கபடுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை :
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து, அதனை தொடர்ந்து புதிப்பித்து 5 வருடங்கள் ஆகியும் வேலை கிடைக்காமல் உள்ள இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு மாதந்தோறும் கல்வித்தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மாதம் ஒரு முறை மின்கணக்கீடு திட்டம் விரைவில் – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து ராமநாதபுர வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அதை தொடர்ந்து புதுப்பித்து 5 வருடங்கள் ஆகியும் வேலை கிடைக்காமல் உள்ள இளைஞர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்புபவர்களின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் பட்டியலின மக்களுக்கு 45 வயதிற்கு உட்பட்டவர்களாகவும், மற்ற பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
உதவி தொகை பெற விண்ணப்பிக்கும் மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும் எனவும் மற்றவர்களுக்கு 3 ஆண்டு வரை உதவித்தொகை வழங்கப்படும் எனவும் விண்ணப்பிக்க விரும்புவோர் ராமநாதபுர வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் சென்று இலவசமாக விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்கலாம் அல்லது https://tnvelaivaaippu.gov.in/Empower மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது