விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து மீண்டும் விலகிய முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியலில் இருந்து மீண்டும் விலகிய முக்கிய கதாபாத்திரம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து மீண்டும் விலகிய முக்கிய கதாபாத்திரம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து பல முக்கிய கதாபாத்திரங்கள் விலகிய நிலையில், தற்போது அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கண்மணி ஸ்வீட்டி சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாரதி கண்ணம்மா அஞ்சலி:

பாரதி கண்ணம்மா டாப் சீரியலில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான அகிலாக நடித்த அகிலன் திடீரென சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக சுகேஷ் என்பவர் நடித்து வருகிறார். டாப் சீரியலில் முக்கிய கதாபாத்திரம் விலகியதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்த நிலையில், மீண்டும் சீரியலில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி விலகுவதாக அறிவித்தார். அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருந்தாலும் தற்போது புதிதாக களமிறங்கி இருக்கும் வினுஷாவின் எதார்த்தமான நடிப்பால் சீரியல் டாப் வரிசையில் தொடர்ந்து இருக்கிறது.

இந்நிலையில் சீரியல் கதையில் பல மாற்றங்கள் இனி வரும் நாட்களில் நடைபெற இருக்கிறது. பாரதி கண்ணம்மாவை சேர்ந்து வாழ நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஆனால் பாரதி மீண்டும் வாழ மாட்டேன் என்ற முடிவுக்கு வருகிறார். அதனால் சீரியலில் எந்த மாதிரி மாற்றங்கள் வரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே வெண்பாவின் ஆட்டம் ஆரம்பமாகி இருக்கிறது. அதில் பாரதி இனி வெண்பா வீட்டில் தங்க இருப்பதால் கண்ணம்மாவை வெண்பா வெறுப்பேற்றுகிறார்.

மாநிலம் முழுவதும் பிப்ரவரி 8ம் தேதி வரை பள்ளிகள் மூடல் – அரசு உத்தரவு!

இப்படி கதைக்களம் சூடுபிடித்து கொண்டிருக்க சீரியலில் மீண்டும் ஒரு கதாபாத்திரம் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது அஞ்சலி கதாபாத்திரத்தில் கண்மணி சீரியலில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘சூப்பர் குயின்’ நிகழ்ச்சியிலும் போட்டியாளராக களமிறங்கியிருக்கிறார் கண்மணி, மேலும் அதே தொலைக்காட்சியில் புதிய சீரியலில் அவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்திருக்கும் அவர், ‘விரைவில் வேறொரு ப்ராஜெக்ட்டில் உங்களை எண்டெர்டெயின் செய்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here