தமிழக அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் – நீதிமன்றம் உத்தரவு!

0
தமிழக அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் - நீதிமன்றம் உத்தரவு!
தமிழக அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் - நீதிமன்றம் உத்தரவு!
தமிழக அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் – நீதிமன்றம் உத்தரவு!

அரசு கட்டிடங்கள், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் அமைக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் கற்பகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவு:

தமிழகம் முழுவதும் உள்ள 49,500 அரசு கட்டிடங்களில் 26,769 கட்டிடங்களில் நுழைவு வாயில்களில் சாய் தளம் மற்றும் கைப்பிடி அமைக்கப்பட்டுள்ளதாகவும், 21,063 கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்லக்கூடிய வகையில் வாகன வசதிகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல், 1029 கட்டிடங்களில் பிரெய்லி முறையில் லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அரசு கட்டிடங்களிலும் 54 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் ஏற்படுத்தபட்டுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2017ல் கொண்டு வருவதற்கு முன்புள்ள, 45 சதவீத கட்டிடங்களைப் பொறுத்தவரை மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வண்ணம் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் தெறிவித்திருந்தனர்.

நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அனைத்து அரசு கட்டிடங்களிலும், அடுத்த ஆண்டிற்குள் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் அணுக முடியாத அளவிற்கு எந்த கட்டிடங்களும் இருக்காது என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது என அரசு தரப்பு வக்கீல் கூறியுள்ளார். விசாரணையின் முடிவில் தமிழ்நாடு அரசு இதை நிறைவேற்றத் தவறினால் சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கபடும் எனவும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!