தமிழகத்தில் கூடுதல் வெயில் சுட்டெரிக்கும் – பொதுமக்களே உஷார்!!

0
தமிழகத்தில் கூடுதல் வெயில் சுட்டெரிக்கும் - பொதுமக்களே உஷார்!!
தமிழகத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி வரையிலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் எச்சரித்து இருக்கிறது.
கூடுதல் வெயில்:

தமிழகத்தில் தற்போது மொத்தமாகவே மழையின் அளவு குறைந்து வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், காலை வேளையில் சற்று லேசான பனிமூட்டமும் நிலவி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி வரையிலும் வறண்ட வானிலேயே நிலவும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. அதற்கு பின்னர் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பொழியலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னையை பொறுத்த வரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்சம் வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், தமிழகத்திலேயே அதிகபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 36.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பொதுமக்கள் அசௌகரியம் தெரிவித்துள்ளனர். அடுத்தபடியாக கடலில் புயல் சின்னம் எதுவும் உருவாகாத நிலையில் மீனவர்கள் வழக்கம் போல கடலுக்குள் மீன் பிடிக்க செல்லலாம் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!