EPFO பயனர்களின் கணக்கில் வட்டித்தொகை – எப்படி சரிபார்க்கலாம்? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

0
EPFO பயனர்களின் கணக்கில் வட்டித்தொகை - எப்படி சரிபார்க்கலாம்? தெரிஞ்சுக்கலாம் வாங்க!
EPFO பயனர்களின் கணக்கில் வட்டித்தொகை - எப்படி சரிபார்க்கலாம்? தெரிஞ்சுக்கலாம் வாங்க!
EPFO பயனர்களின் கணக்கில் வட்டித்தொகை – எப்படி சரிபார்க்கலாம்? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள தொகைகளுக்கான வட்டி தொகை விரைவில் செலுத்தப்பட உள்ளது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

வட்டி தொகை:

ஊழியர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் நிறுவனத்தின் சார்பிலும், பணியாளர்களின் சார்பிலும் மாதந்தோறும் 12% சம்பள தொகையானது பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஊழியர்களின் கணக்கில் இருக்கும் இந்த தொகை அவர்களின் எதிர்கால வாழ்விற்கு பல்வேறு வகையிலான உதவிகளையும் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட சதவீதம் வட்டியை நிர்ணயித்து அதனை அவர்களின் கணக்கில் நேரடியாக செலுத்தி வருகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

நடப்பு ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி கணக்கிற்க்கான வட்டி தொகையானது 8.15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரவிருக்கும் பண்டிகைகளை ஒட்டி மத்திய அரசு இந்த வட்டிக்கான தொகையை ஊழியர்களின் பிஎப் கணக்கில் விரைவில் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.16 ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் இயங்காது – பொதுமக்கள் கவனத்திற்கு!

அதன்படி ரூபாய் 6 லட்சம் அளவிற்கு தனது கணக்கில் பிஎப் தொகை வைத்துள்ளவர்களுக்கு ரூபாய் 50,000 வட்டி தொகையாகவும், 5 லட்சம் கணக்கில் உள்ளவர்களுக்கு ரூபாய் 42,000 வட்டியாகவும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனை EPFO பயனர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களின் மொபைல் போனின் வாயிலாக உமங் செயலி, இ பி எஃப் ஓ இணையதளம், மிஸ்டு கால் மற்றும் எஸ் எம் எஸ் மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!