ஓட்டுநர் உரிமம் பெறுவது ஈசி தான் பாஸ் – நச்சுனு ஒரு அப்டேட்!
ஓட்டுநர் உரிமம் பெற இனி அலையத் தேவையில்லை, வீடுகளுக்கு தபால் மூலம் அனுப்பும் வசதி நடைமுறைப்படுத்தப்படுகிறது.
ஓட்டுநர் உரிமம்:
சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இயக்குவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயமானதாகும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஓட்டுநர் உரிமம் பெறுவது என்பது கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து எல்.எல்.ஆர். பதிவு செய்ய வேண்டும். பின்னர் வாகன ஆய்வாளர் முன்பு ஓட்டிக் காட்டி, போட்டோ எடுத்துக் கொண்ட பின் நேரில் சென்று ஓட்டுநர் உரிமம் பெற்று கொள்ள வேண்டும்.
CUET – UG நுழைவுத் தேர்வு விண்ணப்ப பதிவுகள் தொடக்கம் – NTA வெளியிட்ட முக்கிய தகவல்!
ஆனால் தற்போது ஓட்டுநர் உரிமம் விண்ணப்பதாரரின் வீடுகளுக்கு தபாலில் அனுப்பும் வசதி நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதாவது வாகன ஆய்வாளர் முன்பு ஓட்டிக் காட்டி, போட்டோ எடுத்துக் கொண்ட பின் அதில் உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்படும். முகவரி தவறாக இருக்கும் பட்சத்தில் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சரியான முகவரியை எழுதி கொடுத்து தபால் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.