மார்ச்.1 ம் தேதி முதல் இனி ‘இவை’ கட்டாயம் – சுகாதாரத்துறை உத்தரவு!

0
மார்ச்.1 ம் தேதி முதல் இனி 'இவை' கட்டாயம் - சுகாதாரத்துறை உத்தரவு!

சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவரும் மார்ச் 1ஆம் தேதி முதல் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை ஆனது தற்போது உத்தரவிட்டுள்ளது.

சுகாதாரத் துறை உத்தரவு:

ஹரியானா மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹரியானா சிவில் பல் அறுவை சிகிச்சை நிபுணர் சங்கம், செவிலியர் நல சங்கம் போன்றவற்றுடன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் அனைத்தும் ஆலோசிக்கப்பட்டது. இதன் பின்னர் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் ஊழியர்கள் மார்ச் 1ஆம் தேதி முதல் சீருடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் கடந்த ஆண்டு சுகாதார நிபுணர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவற்றில் குறிப்பிட்ட சிகை அலங்காரங்கள், ஒப்பனை, நீண்ட நகங்கள், டெனிம், டீசர்ட்டுகள், பாவாடைகள் போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது. நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவமனை ஊழியர்கள் குறிப்பிட்ட நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆடை கட்டுப்பாடு அதில் முக்கிய அங்கமாகும் என்று கூறியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!