தமிழக அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? அதிருப்தி!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை பணிகள் தற்போது துவங்கியுள்ள நிலையில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்குமா என்ற குழப்பத்தில் மாணவர்கள் காணப்படுகின்றனர்.
மாணவர் சேர்க்கை
இந்த ஆண்டு மீண்டும் உருவான கொரோனா பேரலையால் தமிழகத்தில் பொதுத் தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அவர்களுக்கு மதிப்பீடுகளை வழங்க மாநில அரசு முடிவு செய்தது. இதற்கிடையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பணிகளும் முடங்கியுள்ளது.
இணையவழி கல்வி வழங்கும் நிறுவனங்களுக்கான அங்கீகாரம் நீட்டிப்பு – யூஜிசி அறிவிப்பு
ஏறத்தாழ அனைத்து தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை பணிகள் ஆன்லைன் வழியாக நடைபெற்று வருகிறது. இதனால் அரசு கல்லூரிகளில் பயில விரும்பும் மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜூலை மாத கடைசியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என கூறப்படுகிறது.
தனியார் பள்ளிகளை பொருத்தளவு, மாணவர் சேர்க்கை முக்கியம் என்பதால் ஆன்லைன் வழியாக இப்பணிகளை கல்லூரி நிர்வாகங்கள் துவங்கியுள்ளது. இதனிடையே சில அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் முதுநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளதாகவும், சில கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் முடிந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் முதுநிலை பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை நடந்து வருவதால், அதிக மதிப்பெண் பெற்று விரும்பும் கல்லூரிகளில் சேருவதற்கான வாய்ப்புகள் கிடையாது என்ற அச்சம் மாணவர்களிடையே எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு கல்லூரி முதல்வர் கூறுகையில், ‘வழக்கமாக உயர்கல்வித்துறையின் வழிகாட்டுதல்களின் கீழ் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் இதுவரை புதிய மாணவர் சேர்க்கை குறித்த எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.
TN Job “FB
Group” Join Now
மறுபக்கத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு பருவத்தேர்வு ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறுவதால் இதற்கு பிறகு தான் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு முதுநிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கை துவங்கும். தனியார் கல்லூரிகளை பொருத்தளவு 5 வது பருவ மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை துவங்கினாலும், இறுதி தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் பெறுபவர்களுக்கு அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில் இடம் கிடைக்கும். இருப்பினும் அரசு கல்லூரிகளில் ஜூலை மாத இறுதியில் முதுநிலை மற்றும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இளநிலை வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை துவங்கலாம்’ என கூறியுள்ளார்.