இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி – கவலையில் ரசிகர்கள்!

0
இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி - கவலையில் ரசிகர்கள்!
இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி - கவலையில் ரசிகர்கள்!
இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி – கவலையில் ரசிகர்கள்!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் இருந்து கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உறுதி

இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலை வேகமாக பரவி வருகிறது. அத்துடன் தென்னாப்பிரிக்காவில் உருவான கொரோனாவின் புதிய வகை வைரஸான ஓமைக்ரான் தொற்று பரவலும் பல மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முதல் முறையாக தனது விவாகரத்து பற்றி கூறிய ‘செம்பருத்தி’ ஷபானா – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அத்துடன் அனைத்து இடங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து திரைத்துறை பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக கமல்ஹாசன், வடிவேலு, விஷ்ணு விஷால், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, துல்கர் சல்மான் உள்ளிட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் – மத்திய ரயில்வே அறிவிப்பு! பொதுமக்கள் கவனத்திற்கு!

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் கடந்த இரண்டு மூன்று நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இவர் தற்போது தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!