டிப்ளமோ மாணவர்களுக்கு அரியர் தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம் தரலாம் – நீதிமன்ற கிளை கருத்து

0
டிப்ளமோ மாணவர்களுக்கு அரியர் தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம் தரலாம் - நீதிமன்ற கிளை கருத்து
டிப்ளமோ மாணவர்களுக்கு அரியர் தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம் தரலாம் - நீதிமன்ற கிளை கருத்து

டிப்ளமோ மாணவர்களுக்கு அரியர் தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம் தரலாம் – நீதிமன்ற கிளை கருத்து

டிப்ளமோ மாணவர்களுக்கு அரியர் தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம் தரலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. முன்னதாக மாணவர் சார்பில் தொடரப்பட்ட இவ்வழக்கில் நீதிமன்ற கிளை தற்போது கருத்து தெரிவித்து உள்ளது

கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் தேர்வுக்குரிய கட்டணத்தை சில மாணவர்களால் கட்ட இயலவில்லை. அதனை மீண்டும் செலுத்திய பொழுது, அவகாசம் முடிந்ததை அடுத்து தேர்வுக் கட்டணம் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. எனவே மாணவர்கள் தங்களால் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது போன்ற நிலையில் மாணவர்களில் ஒருவரான, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் தேவதுரை, தன்னை தேர்வுக்கட்டணம் செலுத்த அனுமதித்து முறையாக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த, நீதிபதி வைத்தியநாதன் அமர்வு, ஓர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் குறிப்பாக கல்லூரி பருவங்களில் முழுமையான தேர்ச்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் சில மாணவர்கள், தங்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பு மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதையடுத்து, இவற்றை கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலன் கருதி அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒருமுறை அவகாசம் தரலாம் என்று தெரிவித்தனர். அவகாசம் வழங்குவது, தேர்வின்றி தேர்ச்சி என்ற அறிவிப்பை காட்டிலும் சிறப்பாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மறு மதிப்பீடு முடிவு வருவதற்குள் தேர்வு கட்டண அவகாசம் முடிந்துவிட்டதாக மாணவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!