DFCCIL நிறுவனத்தில் Manager ஆக பணிபுரிய வாய்ப்பு – தேர்வு கிடையாது!
DFCCIL என்னும் Dedicated Freight Corridor Corporation of India நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Manager / Assistant Manager / Jr. Manager பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | DFCCIL |
பணியின் பெயர் | Manager / Assistant Manager / Jr. Manager |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DFCCIL காலியிடங்கள்:
DFCCIL நிறுவனத்தில் காலியாக உள்ள Manager / Assistant Manager / Jr. Manager (Mechanical) பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
DFCCIL பணிக்கான தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், PSU நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 04 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
DFCCIL வயது:
Manager / Assistant Manager / Jr. Manager (Mechanical) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 55 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
DFCCIL ஊதியம்:
இந்த DFCCIL நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Parent Pay Plus Deputation Allowance விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.
DFCCIL தேர்வு செய்யும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
CSIR NISC நிறுவனத்தில் ரூ.35,000/- மாத ஊதியத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே!
DFCCIL விண்ணப்பிக்கும் விதம்:
Manager / Assistant Manager / Jr. Manager (Mechanical) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள DFCCIL நிறுவன முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் (30.12.2023) தபால் செய்ய வேண்டும்.