ஆன்லைன் மூலம் மதுபானம் விற்க அனுமதி – அரசு உத்தரவு!!

1
ஆன்லைன் மூலம் மதுபானம் விற்க அனுமதி - அரசு உத்தரவு!!
ஆன்லைன் மூலம் மதுபானம் விற்க அனுமதி - அரசு உத்தரவு!!
ஆன்லைன் மூலம் மதுபானம் விற்க அனுமதி – அரசு உத்தரவு!!

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மது விற்பனை:

கொரோனாவின் இரண்டாம் அலையின் தீவிரத்தினால் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் தினசரி உயிரிழப்பின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதன் காரணமாக மக்களை பாதுகாத்து உயிரிழப்பின் விகிதத்தை குறைக்கும் வகையில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் டெல்லியில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிக அளவில் காணப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து அங்கு கடுமையாக ஊரடங்கு விதிக்கப்பட்டது.

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 1,27,510 பேருக்கு தொற்று!!

இதன் பலனாக டெல்லியில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிய பாதிப்பாக ஆயிரத்திற்கும் குறைவாக 648 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது தினசரி கொரோனா பாதிப்பின் விகிதம் 1 சதவிகிதத்திற்கு கீழ் குறைந்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது டெல்லி அரசு ஓர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

அதன்படி டெல்லியில் ஆன்லைன் மூலம் மதுபானம் விற்க அனுமதியளித்து, மக்கள் ஆன்லைன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மதுபானங்களை வாங்கிக்கொள்ளலாம் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்று மதுபானங்களை விநியோகிக்க வேண்டும் என்றும் அதற்காக L-14 என்ற உரிமம் பெற்ற வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Why don’t you add the specific region’s name in your so called flash news;

    Example: today’s news “ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு”
    What stopped you to add one extra word “மகாராஷ்டிர மாநிலத்தில்”

    It doesn’t trigger the curiosity to open and read the news in depth, which normally doesn’t happens on your news report because of such half boiled headlines. Rather it shy away from reading further any important news also from your portal.

    Please consider

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!