தமிழக அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தாமதம் – பெற்றோர்கள் தவிப்பு!
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. அதனை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
மாணவர் சேர்க்கை:
கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் பாடங்கள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் கல்லூரியில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். பல்வேறு கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வரும் நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை.
பள்ளி மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு – தேசிய அறிவியல் விழிப்புணர்வு திறனறித்தேர்வு!
தமிழகத்தின் உயர்கல்வித்துறையின் கீழ் 143 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் கடந்த 10 ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நடைபெற்றது. கொரோனா தாக்கத்தின் காரணமாக ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து மாணவர்களின் விண்ணப்ப படிவங்கள் குவிந்து வந்தது. மேலும் வெளியாகும் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.
TN Job “FB
Group” Join Now
ஆனால் சேர்க்கை பதிவு முடிந்து 10 நாட்கள் ஆன நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கவில்லை. மேலும் தரவரிசை பட்டியல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக விசாரிக்க செல்பவர்களை கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அதனை தொடர்ந்து உயர் கல்வித்துறை விரைவாக பணிகளை முடித்துவிட்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் வலியுறுத்தியுள்ளனர்.