தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புக்கு இறப்பு சான்றிதழ் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

0
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புக்கு இறப்பு சான்றிதழ் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புக்கு இறப்பு சான்றிதழ் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புக்கு இறப்பு சான்றிதழ் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும் போது சான்றிதழில் கோவிட் -19 தொற்றினால் தான் அவர்கள் இறந்தார்கள் என்ற சரியான காரணத்தை குறிப்பிட்டு சான்று வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

கொரோனா இறப்பு சான்றிதழ்:

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தொற்று பரவும் வீதம் குறைந்தது வருகிறது. ஆனால் இறப்பு எண்ணிக்கை அதே நிலையில் உள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தமாக 27,356 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இறந்தவர்களது இறப்பு சான்றிதழில் கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்கள் என்று குறிப்பிடுவதில்லை.

IND vs NZ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி – நடுவர்கள் தேர்வு!!

அதற்கு பதிலாக வேறு காரணங்களால் இறந்தார்கள் என்று இறப்பு சான்றிதழ் தருவதாக புகார்கள் எழுந்து வருகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். கொரோனா நோய்த்தொற்றால் இறப்பவர்கள் கொரோனா வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி அடக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனாவால் இறந்தவர்களுக்கு வேறு காரணங்களால் இறந்தவர்கள் என்று இறப்பு சான்றிதழ் தருவதால் ஒரு சிலர் அவர்களது உடல்களை வீட்டிற்கு எடுத்துச் சென்று உற்றார், உறவினர் கலந்து கொள்ளும் வகையில் இறுதிச் சடங்கை மேற்கொள்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இதனால் தொற்று அனைவருக்கும் எளிதாக பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. வேறு காரணங்களை குறிப்பிடுவதால் பெற்றோர்களை இழந்து வாழும் குழந்தைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரண உதவிகள் கிடைப்பதில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கின்றனர். கொரோனாவால் இறந்தால் அவர்களின் இறப்பு சான்றிதழில் சரியான காரணத்தை குறிப்பிட்டு சான்று அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.கொரோனா வழிமுறைகளை பின்பற்றி அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!