IND vs NZ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி – நடுவர்கள் தேர்வு!!

0
IND vs NZ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - நடுவர்கள் தேர்வு!!
IND vs NZ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி - நடுவர்கள் தேர்வு!!
IND vs NZ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி – நடுவர்கள் தேர்வு!!

இந்தியா – நியூசிலாந்து அணிகள் பங்கேற்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் மைக்கல் கோஃப் செயல்படுவார்கள் என ஐசிசி அறிவித்துள்ளது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:

இங்கிலாத்தின் சவுத்தாம்டன் நகரில் ஜூன் 18 முதல் 22ம் தேதி வரை இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள மும்பையில் இருந்து இங்கிலாந்து சென்ற இந்திய அணியினர் பயோ பபுள் கொரோனா விதிமுறைகள் காரணமாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

`தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சை – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!!

14 நாட்கள் தனிமைக்கு பின்னர் இந்திய வீரர்கள் சவுத்தாம்டன் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். வரலாற்றில் சிறப்பு மிக்க இந்த போட்டியில் களநடுவர்களாக இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் மைக்கல் கோஃப் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஐசிசியின் எலைட் குழுவில் இருப்பவர்கள் ஆவர். 53 டெஸ்ட் போட்டிகளில் ரிச்சர்ட் இல்லிங்வொர்த், 19 டெஸ்ட் போட்டிகளில் மைக்கல் கோஃப் ஏற்கனவே பணியாற்றி அனுபவமுள்ளவர்கள்.

TN Job “FB  Group” Join Now

இந்த போட்டியின் ரெஃப்ரியாக கிறிஸ் பிராட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக வேறு நாட்டை சேர்ந்தவர்கள் நடுவர்களாக நியமிக்கப்படுவார்கள். ஆனால் கொரோனா பரவல் பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருவதால் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களே நடுவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி விளக்கமளித்துள்ளது. மேலும் ஆட்ட நடுவர்களும் பயோ பபுள் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!