பள்ளி புத்தகத்தில் Dating & Relationship பாடங்கள் – அதிர வைக்கும் சம்பவம்!

0
பள்ளி புத்தகத்தில் Dating & Relationship பாடங்கள் - அதிர வைக்கும் சம்பவம்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் உள்ள பள்ளி பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பாடங்கள் குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

பாட புத்தகம்:

பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாடங்களில் எவையெல்லாம் புகுத்தப்பட்டுள்ளது என்பது சமீபகாலமாக பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில் மதிப்புணர்வு பாடத்தில் Dating & Relationship என்ற தலைப்பின் கீழ் பாடங்கள் உள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படங்களின் வாயிலாக இது தெரிய வருகிறது. மேலும் இதுகுறித்து பலரும் தங்களது கருத்துக்களை இணையதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

ECHS கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2024 –  ரூ.75,000/- ஊதியத்தில் சூப்பர் வாய்ப்பு!

ஒரு சாரார் பள்ளி மாணவர்களுக்கு இது போன்ற தலைப்புகளில் பாடங்கள் தேவையா ? என்றும் மறுபுறம் இவை பதின் பருவவயது மாணவர்களுக்கு கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டிய விஷயம் தான் என்றும் கருத்துக்கள் வெளியாகி வருகிறது. மேலும் சிலர் இது போன்ற பாடங்கள் தாங்கள் படிக்கும் காலங்களில் இல்லையே என்று கூறியுள்ளனர். சமூக ஆர்வலர்கள் இது குறித்து அடுத்து வரும் இளைய தலைமுறையினர் இதுபோன்ற பாடங்களை அறிந்து கொள்வதன் மூலம் தங்கள் உணர்வுகளை திறம்பட கையாள முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!