ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -24, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை -24, 2019  

TNPSC Group 4 OnlineTestSeries 2019

 • ஜூலை 24 – தேசிய வெப்ப பொறியாளர் தினம்
 • மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) மற்றும் அனைத்து கள அலுவலகங்களும் 159 வது வருமான வரி தினத்தை ஜூலை 24, 2019 அன்று கொண்டாடுகின்றன.
 • கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
 • 1968ல் காணாமல்போன பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் மினெர்வ் மத்தியதரைக் கடலில் கண்டுபிடிக்கப்பட்டது.
 • பிரிட்டனின் பல்கலைக்கழகங்களை ஆதரிப்பதற்காக புதிய இந்தியா-இங்கிலாந்து இருதரப்பு பைலட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
 • சணல் இழைகளை ‘சோனாலி’ என்ற பெயரில் குறைந்த விலையில் மக்கிப்போகக்கூடிய செல்லுலோஸ் தாள்களாக மாற்றுவதற்கான புதிய முறையை பங்களாதேஷில் உள்ள விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
 • 2020 முதல் பாதியில் இஸ்ரோ ஆதித்யா-எல் 1 பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.
 • சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 2019-20க்கான 7% ஆக குறைத்துள்ளது.
 • தேசிய கேடட் கார்ப்ஸ் (என்.சி.சி) கேடட்டுகளுக்கு வழங்கப்படும் விருதுகளின் எண்ணிக்கையை தற்போதுள்ள 143 லிருந்து 243 ஆக உயர்த்தவும், பல்வேறு பிரிவுகளில் ரொக்க ஊக்கத்தொகை அதிகரிக்கவும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
 • வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் புதுடில்லியில் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டை (ஜிஐஐ) அறிமுகப்படுத்தவுள்ளார்.
 • ஐ.சி.சி டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் சமீபத்திய தரவரிசையை வெளியிடப்பட்டது . அதில் இந்திய கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளார்.
 • பாண்டிச்சேரி கூடைப்பந்து சங்கம் (பிபிஏ) கூட்டமைப்பு கோப்பையை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 2020 ஜனவரி மூன்றாவது வாரத்தில் நடத்தவுள்ளது.
 • முன்னாள் ஆசிய சாம்பியனும், இரண்டாம் நிலையில் உள்ள பக்தி குல்கர்னி ஏழாவது சுற்றில் முதல் இடத்தில உள்ள சௌமியா சுவாமிநாதனை தோற்கடித்து 46 வது தேசிய மகளிர் சதுரங்க சாம்பியன்ஷிப்பில் 6.5 புள்ளிகளுடன் ஜெயித்துள்ளார்.
 • கொல்கத்தாவில் நடைபெற்ற ஆறாவது வங்காள ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பட்டங்களை தமிழ்நாட்டின் அபய் சிங் மற்றும் ஆசிய விளையாட்டு பதக்கம் வென்ற தன்வி கன்னா வென்றனர்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 24, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here