நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

0
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது - மத்திய அமைச்சர் அறிவிப்பு!!
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது - மத்திய அமைச்சர் அறிவிப்பு!!
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

இந்திய திரைப்படத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் திரையுலக பிரபலங்களுக்கு இந்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தாதா சாகேப் பால்கே:

திரைப்பட உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் இந்திய அரசால் வழங்கப்படும் தேசிய விருதுகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோருக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. சிறந்த திரையுலக பிரபலங்களுக்காக வழங்கப்படும் மற்றுமொரு விருதான தாதா சாகேப் பால்கே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்திய திரைப்படத் துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே அவர்களின் நினைவாக 1969 ஆம் ஆண்டு முதல் தாதா சாகேப் பால்கே விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் இந்த ஆண்டுக்கான விருதாக தென் இந்திய சினிமாவின் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பலருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தனியார் பள்ளி மாணவிக்கு மருத்துவ சேர்க்கையில் இட ஒதுக்கீடு – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

தற்போது 70 வயதான நடிகர் ரஜினிகாந்த் கடந்த 45 வருடங்களாக சினிமாவில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு சினிமா துறையின் வாழ்நாள் சாதனையாளர் விருதாக இந்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!