மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு கிடைப்பதில் சிக்கல்? அதிர்ச்சி தகவல்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு கிடைப்பதில் சிக்கல்? அதிர்ச்சி தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு கிடைப்பதில் சிக்கல்? அதிர்ச்சி தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு கிடைப்பதில் சிக்கல்? அதிர்ச்சி தகவல்!

கடந்த சில நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வந்த அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த முடிவு நாடாளுமன்ற அவையில் எடுக்கப்படாத நிலையில், இப்போது DA உயர்வு இருக்குமா என்ற சந்தேகங்கள் எழத்துவங்கியுள்ளது.

DA உயர்வு

இந்த ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு அதாவது மார்ச் 18, 2022 அன்று அகவிலைப்படி (DA) உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒரு பெரிய அப்டேட் கிடைக்க இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஜனவரி 1, 2022 முதல் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகை 3% ஆக உயரும் என பல ஊடக அறிக்கைகள் தகவல் வெளியிட்டன. இருப்பினும், சில அறிக்கைகள் மத்திய அரசாங்கம் DA தொகையை திருத்துவதற்கு திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறுகிறது.

தமிழக அரசு ஆசிரியர், பள்ளிகள் விபரங்கள் – தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி!

இதற்கிடையில் நாடாளுமன்ற அவையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதத்திற்கு மேல் உயர்த்த வேண்டிய அவசியமில்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார். அதாவது DA உயர்வு குறித்து நாடாளுமன்ற அவையில் கேள்வி எழுப்பிய போது ‘அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் படி, பணவீக்கத்தின் அடிப்படையில் DA நிர்ணயிக்கப்படும். கடந்த இரண்டு காலாண்டுகளில் பணவீக்க விகிதம் 5 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. என்றாலும் DA தொகையை 3 சதவீதத்திற்கு மேல் உயர்த்த அரசாங்கம் திட்டமிடவில்லை.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி விகிதத்தை திருத்த வேண்டிய அவசியம் இல்லை’ விளக்கம் அளித்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போதைய அகவிலைப்படி (DA) தொகை 31% ஆகும். இப்போது ஜனவரி மாத தவணைக்கான 3% DAவுக்கு அரசு ஒப்புதல் அளித்தால் மொத்த தொகை 34% ஆக அதிகரிக்கலாம். வழக்கமாக மத்திய அரசு ஊழியர்களின் DA ஜனவரி மற்றும் ஜூலை என ஆண்டுக்கு இரண்டு முறை புதுப்பிக்கப்படுகிறது. மேலும், தற்போதைய அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்தால் பெருக்குவதன் மூலம் DA கணக்கிடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!