அன் ஸ்கில்டு மற்றும் செமி ஸ்கில்டு ஊழியர்களுக்கு DA உயர்வு – அரசு உத்தரவு!

0
அன் ஸ்கில்டு மற்றும் செமி ஸ்கில்டு ஊழியர்களுக்கு DA உயர்வு - அரசு உத்தரவு!
அன் ஸ்கில்டு மற்றும் செமி ஸ்கில்டு ஊழியர்களுக்கு DA உயர்வு - அரசு உத்தரவு!
அன் ஸ்கில்டு மற்றும் செமி ஸ்கில்டு ஊழியர்களுக்கு DA உயர்வு – அரசு உத்தரவு!

கொரோனா நோய் தொற்று காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அரசுத் துறைகளின் அன் ஸ்கில்டு மற்றும் செமி ஸ்கில்டு தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகையை உயர்த்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

DA உயர்வு

டெல்லியில் உள்ள திறமையற்ற, அரைத் திறன் (unskilled and semi-skilled) மற்றும் பிற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படியை (DA) தொகையை உயர்த்தி வழங்குவதற்கான உத்தரவை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்று (நவ.8) பிறப்பித்துள்ளார். இந்த தொகை கொரோனா தொற்றுநோய் மற்றும் பணவீக்கத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் தொழிலாள வர்க்கத்திற்கு ஓரளவு நிவாரணம் தரும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பயண கட்டுப்பாடுகளில் தளர்வுகள்!

இப்போது உயர்த்தப்பட்ட DA விகிதத்தால், திறமையற்ற தொழிலாளர்களின் மாத ஊதியம் ரூ.15,908ல் இருந்து ரூ.16,064 ஆகவும், அரைகுறைத் திறனுள்ள தொழிலாளர்களின் மாதச் சம்பளம் ரூ.17,537ல் இருந்து ரூ.17,693 ஆகவும் உயர்ந்துள்ளதாகவும் டெல்லி அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனிடையே திறமையான தொழிலாளர்களின் மாத ஊதியம் ரூ.19,291ல் இருந்து ரூ.19,473 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் கொரோனா தொற்றுநோய்களின் போது தொழிலாளி வர்க்கத்தின் நலன்களை மனதில் வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், எழுத்தர் மற்றும் மேற்பார்வையாளர் வகுப்பு ஊழியர்களும் இதன் மூலம் பலன் பெறுவார்கள் என்றும் துணை முதல்வர் சிசோடியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இப்போது இந்தியாவில் பணவீக்கம் மற்றும் பொருட்களின் விலை உயர்வு ஆகியவை சமூகத்தின் ஒவ்வொரு பிரிவையும் பாதித்துள்ளது.

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நவ.15 பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இதனுடன் தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் போன்ற பொருட்கள் விலை உயர்ந்து வருவதால், கூலி தொழிலாளர்களுக்கு இந்த DA உயர்வு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் நாட்டின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாக உள்ளது என்றும், டெல்லி அரசுத் தொழிலாளர்களுக்கு DAவை உயர்த்துவது ஒரு வருடத்தில் இது இரண்டாவது முறை என அறிக்கைகள் கூறுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!