Home news மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் அகவிலைப்படி (DA)அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் அகவிலைப்படி (DA)அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் அகவிலைப்படி (DA)அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - விரைவில் அகவிலைப்படி (DA)அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் அகவிலைப்படி (DA)அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அவர்கள் ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் அகவிலைப்படி தொகை உயர்வு குறித்த அறிவிப்பை வருகின்ற மார்ச் 31ஆம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகையை உயர்த்தினால் ஒரு கோடிக்கும் அதிகமாக இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வு ஊதியம் பெறுபவர்கள் என பலரும் பலன் அடைவார்கள் என்று ஒரு சில செய்தி நிறுவனங்கள் கூறிவருகிறது. இந்த நிலையில் தற்போது டி ஏ தொகை உயர்த்தப் பட்டு உள்ளது. மேலும் இரண்டு மாதங்களுக்கு டி ஏ அரியர் தொகை போன்றவை மார்ச் மாத ஊதியத்துடன் சேர்த்து ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

WhatsApp பயன்படுத்துவோருக்கு சூப்பர் அறிவிப்பு – இனி 2GB வரை ஷேர் செய்யலாம்!

டி ஏ என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அவர்கள் ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் தொகை ஆகும். பெருகி வரும் விலைவாசியில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை டி ஏ மற்றும் டி ஆர் ஆகிய அலோவன்ஸ் தொகைகள் உயர்த்தப்படுகின்றன. குறிப்பாக, ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் இந்த உயர்வுகள் ஆண்டுதோறும் நடைபெறும். எனவே அகவிலைப்படி நிலுவை தொகை எப்போது கிடைக்கும் என பெரும் எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள் உள்ளனர். மேலும், அடுத்த அகவிலைப்படி உயர்வுக்காகவும் காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே ஹோலி பண்டிகையை முன்னிட்டு இம்மாதம் அகவிலைப்படி நிலுவை தொகை குறித்த அறிவிப்பு வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசு ஊழியர்கள் காத்திருந்தனர். ஆனால், பெரும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அகவிலைப்படி நிலுவை பற்றிய அறிவிப்பு வரவில்லை. இந்நிலையில், மார்ச் 31 ஆம் தேதியுடன் நடப்பு நிதியாண்டு முடிவடைய உள்ளது. அதனை தொடர்ந்து மார்ச் 31ஆம் தேதி அளவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவை தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here