23 ஜனவரி நடப்பு நிகழ்வுகள்

0

 உலகம்

  1. அமெரிக்காவை முடக்கிய ‘ஷட்டவுனுக்கு’ வந்தது தீர்வு: தற்காலிக நிதியளிக்க செனட் சபை ஒப்புதல்
  • அமெரிக்காவில் தற்காலிகமாக செலவினங்களுக்கு நிதியளிக்கும் மசோதாவிற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அங்கு கடந்த மூன்று நாட்களாக நிலவி வந்த முடக்கம் சீரடையத் தொடங்கியுள்ளது.
  • அமெரிக்காவில் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை நிதியாண்டாக கணக்கிடப்படுகிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடப்பு 2018 நிதியாண்டுக்கான (அக்டோபர் முதல் செப்டம்பர்) பட்ஜெட் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இதுவரை நிறைவேறவில்லை. அமெரிக்காவில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை நாட்டை விட்டு வெளியே அனுப்பக் கூடாது என, ஜனநாயகக் கட்சியினர் கோரி வருகின்றனர். ஆனால், அதற்கு ஆளும் கட்சியான குடியரசு கட்சி உறுப்பினர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு பதிலடியாக செனட் சபையில் ஜனநாயக கட்சியினர் செலவின மசோதாவை நிறைவேற்ற ஆதரவு தர மறுத்தனர்.
  • இதையடுத்து சிக்கலுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டது. இடைக்கால ஏற்பாடாக, தற்காலிக செலவினங்களுக்கு அனுமதி வழங்கும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.  எனினும் இந்த இடைக்கால செலவின மசோதா பிப்ரவரி 8-ம் தேதி வரை மட்டுமே செல்லத்தக்கது

2. ரஷ்யாஇந்தியா ஏவுகணை ஒப்பந்தம்

  • மாஸ்கோரஷியாவிடம் இருந்து ரூ.39,000 கோடிக்கு இந்தியா ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்க உள்ளது.
  • கடந்த 2016ம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து சீனா 6 எஸ்–400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்கியது. தற்போது இந்தியா 4 எஸ்–400 அமைப்புகளை வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
  • எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானிலே கண்டறிந்து வழி மறித்து தாக்கும் வல்லமை கொண்டது இந்த எஸ்–400 ரக ஏவுகணைகள். பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை முறையடிக்கும் விதமாக இந்த ஏவுகணை தடுப்பு அமைப்புகள் நிலை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

3. டாவோஸில் இன்று உலக பொருளாதார மாநாடு துவக்கம்

  • உலக பொருளாதார மாநாடு, இன்று(ஜன.,23) துவங்கி, நான்கு நாட்கள் நடக்கின்றன. இன்று நடக்கும் துவக்க நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, முக்கிய உரையாற்ற உள்ளார்.
  • ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார மாநாடு நடக்கிறது. நான்கு நாட்கள் நடைபெறும் மாநாடு இன்று துவங்குகிறது. இதில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி, மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் டாவோஸ் சென்றுள்ளனர்.

 இந்தியா

  1. இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் இன்று பதவி ஏற்றார்
  • நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டும் உயர்ந்த பொறுப்புமிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் இன்று பதவி ஏற்றார்.
  • இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகிக்கும் அச்சல் குமார் ஜோதியின்பதவிக்காலம் முடிவடைவதால் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம் செய்யப்பட்டார்.
  • இந்நிலையில், நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டும் உயர்ந்த பொறுப்புமிக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் இன்று பதவி ஏற்றார்

  தமிழகம்

1.ஜூலை 8ல், ‘நெட்’ தேர்வு : யு.ஜி.சி., விதிகள் அறிவிப்பு

  • உதவி பேராசிரியர் பணிக்கான, ‘நெட்’ தகுதி தேர்வு, ஜூலை, 8ல் நடத்தப்படும் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. முதுநிலை படிப்பு முடித்தோர், கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, ‘நெட்’ என்ற, தேசிய தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். கல்லுாரி மற்றும் பல்கலைகளில் படிக்கும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெறவும், நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
  • ஆண்டுக்கு ஒரு முறை, நெட் தேர்வு நடத்தப்படுகிறது. பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் இந்த தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. நடப்பாண்டில், நாடு முழுவதும், ஜூலை, 8ல், நெட் தேர்வு நடக்கும் என, யு.ஜி.சி., நேற்று அறிவித்தது. இந்த ஆண்டுக்கான தேர்வு விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இரண்டு தாள்களுக்கு தலா, 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
  • முதல் தாளில், 50 மற்றும் இரண்டாம் தாளில், 100 வினாக்கள் இடம் பெற உள்ளன. முதல் தாளில் பொதுவான வினாக்களும், இரண்டாம் தாளில், தேர்வர்கள் தேர்வு செய்யும் பாடத்தில் இருந்தும், வினாக்கள் இடம் பெறுகின்றன.
  • தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிக்கை, பிப்.,1ல், https://cbsenet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மார்ச், 6 முதல், ஏப்., 25 வரை, ‘ஆன்லைனில்’ தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என, யு.ஜி.சி.,அறிவித்துள்ளது.
  • வயது வரம்பில் சலுகை : இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெற, நெட் தேர்வு எழுத வேண்டும். தேர்வு விதிகளின்படி, 28 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே, நெட் தேர்வில் பங்கேற்க முடியும். இந்த வயது உச்சவரம்பு, இந்த ஆண்டு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. வரும், ஜூலையில் நடக்கும் தேர்வில், 30 வயது வரை உள்ளவர்கள், நெட் தேர்வை எழுதலாம் என, சலுகை வழங்கப்பட்டுள்ளது.

2. ஐ.ஐ.டி.,யில் எம்.ஏ., : பதிவுக்கு நாளை கடைசி

  •  தேசிய கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், மனிதவளம் மற்றும் சமூக அறிவியல் படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள்.
  • பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, சென்னை, ஐ.ஐ.டி.,யில், ஐந்து ஆண்டு, எம்.ஏ., படிப்பு நடத்தப்படுகிறது. இதில், மனிதவளம் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் நடத்தப்படுகின்றன. வரும் கல்வி ஆண்டில், 46 இடங்கள் மட்டுமே, எம்.ஏ.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இதற்கான நுழைவு தேர்வு, ஏப்.,15ல் நடக்கிறது. தேர்வுக்கான, ‘ஆன்லைன்’ பதிவு, http://hsee.iitm.ac.in என்ற இணையதளத்தில், டிச.,14ல் துவங்கியது; நாளையுடன் பதிவு முடிகிறது.
  • பிளஸ் 2 முடித்தோர், பிளஸ் 2 தொழிற்கல்வி படித்தோர் மற்றும், சி.பி.எஸ்.இ., பாடத்தில் படித்தோரும், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

3. 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

  • முதல்வரின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் உள்ளிட்ட 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
  • ஒடிசா மாநிலப் பணிக்குச் சென்றுள்ள அர்ச்சனா பட்நாயக், மத்திய அரசுப் பணியில் உள்ள சிகி தாமஸ் வைத்தியன், பொதுத்துறை சிறப்புச் செயலாளர் (மரபு), சி.சமயமூர்த்தி, பொதுத் துறை சிறப்புச் செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன், தொழில் துறை சிறப்புச் செயலாளர் எம்.எஸ்.சண்முகம், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தாக்கர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பி.ஜோதி நிர்மலாசாமி, முதல்வரின் செயலாளர் (நிலை 4) ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் கூடுதல் செயலாளர் நிலையிலிருந்து செயலாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

வணிகம்

1.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக அதிகரிக்கும்: சர்வதேச நிதியம் மதிப்பீடு

  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2018ம் ஆண்டில் 7.4 சதவீதமாக அதிகரிக்கும் என சர்வதேச நிதியம் மதிப்பிட்டுள்ளது.
  • சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சர்வதேச நிதியம் சார்பில் உலக அளவில் பொருளாதார சூழல் குறித்த அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
  • இந்தியாவில் பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால், 2017ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி சரிவை சந்தித்தது. இதனால் 2017ல் பொருளாதார வளர்ச்சி 6.7 ஆக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ளது.
  • இதனால் நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கும். 2019ம் ஆண்டில் இது 7.8 சதவீதமாக உயரும்.
  • அதேசமயம் சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் தற்போது 6.8 சதவீதமாக உள்ளது. 2018ம் ஆண்டில் 6.6 சதவீதமாகவும், 2019ம் ஆண்டில் 6.4 ஆக சரிவடைய வாய்ப்புள்ளது.
  • இந்தியாவின் வர்த்தக சந்தையும், உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

2.இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு: 73% சொத்து 1% பணக்காரர்களிடம் உள்ளது- ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல்

  •  உலக அளவில் இந்தியாவில் தான் வருமான ஏற்றத்தாழ்வு மிக மோசமாக உள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • 2017-ம் ஆண்டில் நாட்டில் உருவான வளத்தில், அதாவது சொத்துகள் அனைத்தும் 1% பணக்காரர்களிடம் குவிந்துள்ளது. மொத்தமுள்ள இந்திய மக்கள் தொகையில் 67 கோடி பேரின் வருமானம் கடந்த ஆண்டு 1 % உயர்ந்துள்ளது.
  • 2016-ம் ஆண்டில் ஒரு சதவீத பணக்காரர்களிடம் 58 % சொத்துகள் குவிந்திருந்தது தெரிய வந்தது. ஆனால் 2017-ல் இந்த நிலை மேலும் மோசமடைந்து 73 சதவீத சொத்துகள் ஒரு சதவீத பணக்காரர்கள் வசமே சேர்ந்துள்ளது.
  • இந்தியாவில் உள்ள 10 சதவீத மக்களிடம் 73 சதவீத சொத்துகள் குவிந்துள்ளன. இதில் 37 சதவீத கோடீஸ்வரர்கள் தங்களின் குடும்ப சொத்துகளின் மூலம் இத்தகைய நிலைக்கு உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. நாட்டிலுள்ள கோடீஸ்வரர்களின் சொத் தில் 51 % இவர்கள் வசம் உள்ளதாகவும் ஆக்ஸ்பாம் அறிக்கை தெரிவித்துள்ளது.
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் பலன் ஒரு சில கோடீஸ்வரர்கள் மட்டுமே அனுபவிப்பதாக ஆக்ஸ்பாம் சிஇஓ நிஷா அகர்வால் தெரிவித்தார்
  • நாட்டின் வேளாண் உற்பத்தியில் பாடுபடும் விவசாயி, கட்டமைப்பு வசதிக்காக உழைக்கும் உழைப்பாளி, தொழிற்சாலை பணியாளர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் போராடுகின்றனர். குடும்ப முதியவர்களின் மருத்துவ செலவுகளை ஈடுகட்ட முடியாமல் திணறுகின்றனர். இவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்கு சம்பாதிப்பதே பெரும் போராட்டமாக உள்ளது.
  • இத்தகைய ஏற்றத்தாழ்வு அதிகரித்தால் நாட்டில் லஞ்சம் அதிகரிக்கவும், குரோனி முதலாளித்துவம் உருவாக வழி ஏற்படுத்தும் என்றும் நிஷா அகர்வால் எச்சரித்துள்ளார்

3. பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் உயர்வு

  • மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண், 341.97 புள்ளிகள் உயர்ந்து, 36,139.98 புள்ளிகளாக இருந்தன. அதேபோல் தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 117.50 புள்ளிகள் உயர்ந்து  11,083.70 புள்ளிகளாக உள்ளன.
  • நிஃப்டி மெட்டல் 4.07 சதவீதமும், நிஃப்டி பிஎஸ்யு வங்கி 3.97 சதவீதமும் உயர்ந்ததால், உலோகம், வங்கி பங்குகள் சரிவைச் சந்தித்தன.
  • பிஎஸ்இயில் அனைத்து துறை சார்ந்த குறியீடுகள் உயர்ந்தன. விப்ரோ, டாடா மோட்டார்ஸ், ஆசிய பீஸ்ட்ஸ், ஹெச்.டி.எப்.சி வங்கி ஆகியவை மிகப்பெரும் லாபகரமாக இருந்தன. ஐசிஐசிஐ வங்கி, எஸ்.பி.ஐ, டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன.
  • வர்த்தக நேர முடிவில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ. 63.83 ஆக இருந்தது. நேற்று வர்ததக நேரமுடிவில் 63.87 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு 

 1.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் கால்பதித்தார் ஹையோன்: 3 மணி நேரம் 21 நிமிடங்கள் சவால் கொடுத்து ஜோகோவிச்சை வெளியேற்றினார்

  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார் தென் கொரிய வீரர் ஹையோன் சுங்.
  • ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 80-ம் நிலை வீரரான ஹங்கேரியின் மார்டன் புஸோவிக்ஸை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெடரர் 6-4, 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபனில் பெடரர், கால் இறுதி சுற்றுக்கு முன்னேறுவது இது 14-வது முறையாகும்

23 ஜனவரி நடப்பு நிகழ்வுகள் PDF வடிவம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!