ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 27, 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 27, 2018

  • ரோமானியாவில் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார். வியாரிகோ தான்சிலா.
  • அதி நவீன இரு தொலை உணர்வு செயற்கைக் கோள்களை சீனா விண்ணில் செலுத்தியது. ஜிலின் 1 வீடியோ 07 மற்றும் ஜீலின் 1 வீடியோ 08 ஆகிய இரு செயற்கைக் கோள்களும் ஏவப்பட்டது.
  • 14 வது ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் ( UNWTO – United Naions World Tourism Organisation ) விருது வழங்கும் விழா ஸ்பெயினின்; மாட்ரிட் நகரில் நடந்தது. ஒடிசாவை சேர்ந்த மங்கலஜோதி சுற்றுச் சூழல் சுற்றுலா அறக்கட்டளைக்கு ( Mangala Jodi Ecotourism Trust) வழங்கப்பட்டது.
  • ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷீக்கு அப்துல் கலாம் விருது. ஆந்திர மாநிலம் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சரும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகணுமான நாரா லோகேஷிக்கு வழங்கப்பட்டது.
  • 63 வது ஜியோ – பிலிம்பேர் விருது விழா மும்பையில் நடைபெற்றது. இதில் சிறந்த படத்துக்கான விருது “இந்தி மீடியம்” திரைப்படத்துக்கு கிடைத்தது.
  • 2040 ம் ஆண்டுக்குள் குறுகிய தொலைவு பயணங்களுக்கான விமானங்களை 100 விழுக்காடு மின் மயமாக்க நார்வே அரசு திட்டமிட்டுள்ளது.
  • “ The Future We Need Campaign ” புதிய தேசிய கனிம கொள்கையை (New National Mineral Policy) பிரபலபடுத்தவும், தலைமுறைகளுக்கிடையே உள்ள இடைவெளியை குறைத்து கனிம வளங்களை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • புதிய தேசிய கனிமக் கொள்கையை  வகுக்க அமைக்கப்பட்ட K.P.Rao  குழு அக்டோபர் 31 ல் தனது அறிக்கையை சமர்பிக்கும். உலக பொருளாதார அமைப்பு மக்களின் வாழ்க்கை தரம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு வருங்கால தலைமுறை திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகள் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்தியா 62 வது இடத்தில் உள்ளது. நார்வே முதலிடத்தில் உள்ளது.
  • லண்டனில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமெரிக்க தூதரகத்திற்குவருகை தந்துள்ள முதல் அமெரிக்க உயர்நிலை தலைவர் “டில்லர்ஸன்” (அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்) ஆவார்.
  • பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் நிலையில் உள்ளது.
  • லைபீரியாவின் புதிய அதிபராக ஜார்ஜ் வியோ (முன்னாள் சர்வதேச கால்பந்தாட்ட வீரர்) பதவியேற்றார்.

PDF DOWNLOAD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!