நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 28 2018

0

நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 28 2018

முக்கியமான நாட்கள்

செப்டம்பர் 28 – தகவல் பெற யுனிவர்சல் அணுகலுக்கான சர்வதேச தினம்

தீம் – “The Asian Digital Revolution: Transforming the Digital Divide into a Dividend through Universal Access”.

செப்டம்பர் 28 – உலக ராபீஸ் தினம்

  • ராபீஸ் தினம், ராபீஸ் தடுப்பு பற்றிய விழிப்புணர்வுக்காக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. முதன்முதலாக ராபீஸ் தடுப்பூசியை உருவாக்கிய பிரஞ்சு வேதியியலாளரும் நுண்ணுயிரியலாளருமான லூயிஸ் பாஸ்டரின் மறைந்த தினம் 28 செப்டம்பர் ஆகும்.

தீம் – ‘Rabies: Share the message. Save a life’.

தேசிய செய்திகள்

புது தில்லி

தரவு பகுப்பாய்வு (CEDA) க்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டது

  • தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் டெல்லியில் உள்ள தரவு பகுப்பாய்வு (CEDA) க்கான சிறப்பு மையத்தை தொடங்கிவைத்தார்.

ராஜஸ்தான்

ஜோத்பூரில் பராக்ரம் பர்வ் கண்காட்சி

  • பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ஒருங்கிணைந்த தளபதிகளின் மாநாட்டில் பங்கேற்கிறார். அவர் இந்திய இராணுவக் கண்காட்சியையும் அங்கு திறந்துவைத்தார்.

மகாராஷ்டிரம்

தொடங்கிடு இந்தியா”-மகாராஷ்ட்ரா யாத்திரை

  • “தொடங்கிடு இந்தியா”-மகாராஷ்ட்ரா யாத்திரையை மத்திய வர்த்தகம், தொழில் மற்றும் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு, மும்பை ஆளுநர் மாளிகையில்10.2018 அன்று தொடங்கி வைக்கிறார்.

மத்தியபிரதேசம்

குவாலியர் ராணி விஜய ராஜே சிந்தியாவின் நூற்றாண்டு விழா

  • குவாலியர் ராணி விஜய ராஜே சிந்தியாவின் நூற்றாண்டு விழா அரசு விழாவாக கொண்டாடப்படவிருக்கிறது. இவ்வருடம் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி அடுத்த வருடம் அக்டோபர் மாதம் 11 ஆம்தேதி வரை ஒரு வருட காலத்திற்கு இவ்விழா கொண்டாடப்படும்.

மாநாடுகள்

பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் கழிவு மேலாண்மை பற்றிய சர்வதேச மாநாடு

  • வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி புது தில்லியில் பிளாஸ்டிக் மறுசுழற்சி மற்றும் கழிவு மேலாண்மைக்கான சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்தார்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

  • புது தில்லியில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. நிதி மந்திரி அருண் ஜேட்லி தலைமை தாங்கி 30வது கூட்டத்தை காணொலிகாட்சி மூலம் நடத்த உள்ளார்.

கல்வி மறுமலர்ச்சியில் தலைமைப் பண்பு என்பது குறித்த மாநாடு

  • பிரதமர் நரேந்திர மோடி 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி புது தில்லியில் எழுச்சிக்கான கல்வி மறுமலர்ச்சியில் தலைமைப் பண்பு என்பது குறித்த மாநாடு ஒன்றை திறந்து வைக்க உள்ளார்.

நியமனங்கள்

  • லோக்பால் தேடல் குழு தலைமை – முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய்

திட்டங்கள்

பிரதான் மந்திரி கௌஷல் கேந்திரா

  • ஆன்மிக தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உடன் இணைந்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒடிசா காலாஹண்டி, தர்மகாரில் பிரதான் மந்திரி கௌஷல் கேந்திராவை தொடங்கி வைத்தார்.
  • இந்த மையம் கரிம வேளாண்மை, பிளம்பர், தையல் இயந்திரம் ஆபரேட்டர், வீட்டு சுகாதார உதவியாளர் மற்றும் வீட்டு உபயோக பொருள்களின் மின்சக்தி தீர்வுகள் போன்ற ஐந்து பணிப் பிரிவுகளில் திறன்களை மேம்படுத்தும் படிப்புகளை வழங்கும்.

பசுமை போக்குவரத்துக்கான மாற்று எரிபொருளாக அழுத்தப்பட்ட உயிர் வாயுவை ஊக்குவிப்பதற்காக SATAT தொடக்கம்

  • பெட்ரோல், இயற்கை எரிவாயு மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவு துறை அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி புது தில்லியில் புதுமையான SATAT தொடக்கத்தை PSU எண்ணெய் வணிக  நிறுவனங்களுடன் இணைந்து துவங்கி வைத்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சபரிமலை கோவிலிற்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றம்

  • கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழைவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி வழி வகுத்தது.

பாதுகாப்பு செய்திகள்

HADR இல் IONS பணிக்குழு கூட்டம்

  • மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணம் (HADR) மீது இந்திய பெருங்கடல் கடற்படை (IONS) பணிக்குழுவின் 3 வது கூட்டம் விசாகப்பட்டனத்தின், கடல்சார் போர் மையத்தில் திறந்து வைக்கப்பட்டது.

விருதுகள்

தேசிய சுற்றுலா விருதுகள் 2016-17

  • சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம், அகமதாபாத் – முக்கிய நகரப் பிரிவில் சிறந்த நிலையத்திற்கான விருது
  • தேவி அஹில்யா பாய் ஹோல்கர் விமான நிலையம், இந்தோர் – ரெஸ்ட் ஆப் இந்தியாபிரிவில் சிறந்த விமான நிலையத்திற்கான விருது
  • இந்தோர் விமான நிலையம் – பிராந்தியத்திற்கான சிறந்த விமான நிலையம்

வயோஸ்ரேஷ்த விருது  – 2018″

  • துணைக்குடியரசுத் தலைவர், அக்டோபர் 1, 2018 இல் முதியவர்களுக்கான சர்வதேச தினத்தில் மூத்த குடிமக்களுக்கான விருதுகளை வழங்க உள்ளார்.

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

டிஜிவார்தா(DigiVaarta)

  • டிஜிவார்தா(DigiVaarta),அணுகலை விரைவுபடுத்த மற்றும் நிலைமாற்ற நடவடிக்கைக்கான நிலையை அடைய பல்வேறு திட்டங்களில் குடிமக்கள் கல்வி மூலம் நிதி மற்றும் சமூக உள்ளடக்கத்திற்காக செயல்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு தளம் ஆகும்.

விளையாட்டு செய்திகள்

ஆசியா கோப்பை கிரிக்கெட் இறுதிபோட்டி

  • துபாயில் நடைபெறும் ஆசியா கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை சந்திக்கவுள்ளது இந்தியா.

PDF DOWNLOAD

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!