நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 24 2018

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 24 2018

இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே குற்றம் புரிந்தவர்களை உரிய நாட்டுக்குத் திருப்பிஅனுப்புதல் குறித்த உடன்படிக்கை சமீபத்தில் கையெழுத்திடப்பட்டது?

இந்தியா மற்றும் மலாவி இடையே குற்றம் புரிந்தவர்களை உரிய நாட்டுக்குத் திருப்பிஅனுப்புதல் குறித்த உடன்படிக்கை ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

உலக விவசாய தலைமை உச்சி மாநாடு - 2018 எங்கு திறக்கப்பட்டது?

உலக விவசாய தலைமை உச்சி மாநாடு 2018 புது டெல்லியில் திறக்கப்பட்டது. 2 நாள் உச்சிமாநாட்டின் தீம் - Connecting Farmers to Market’.

உலக போலியோ தினம் என்று கொண்டாடப்படுகிறது?

உலகளாவிய போலியோ தினம் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் போலியோ அழிக்கப்படுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, உலக சுகாதார அமைப்பின் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் முயற்சி, ஒழிப்புக்கு உறுதியளித்த மற்ற தொண்டர்களின் பங்களிப்புக்காக அனுசரிக்கப்படுகிறது. உலக போலியோ தினம் தீம் 2018 - “End Polio Now”.

2018ஆம் ஆண்டுக்கான சியோல் அமைதிப் பரிசு வென்றது யார்?

இந்திய மற்றும் உலகப் பொருளாதாரங்களின் வளர்ச்சிக்கு திரு.நரேந்திர மோடியின் பங்களிப்பை விருதுக் குழு அங்கீகரித்து 2018-க்கான சியோல் அமைதிப் பரிசினை வழங்குகிறது.

இடைக்கால சிபிஐ இயக்குனராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

இடைக்கால சிபிஐ இயக்குநர் - எம். நாகேஷ்வர் ராவ்

2018-2019 ஆம் ஆண்டுக்கான மகரிஷி வால்மீகி விருதை வென்றவர் யார்?

2018-2019 ஆம் ஆண்டுக்கான மகரிஷி வால்மீகி விருதை வென்றவர் - தேவ கவுடா

நீர், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சி எங்கு தொடங்கியது?

நீர், எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சி துபாயில் தொடங்குகிறது. இது மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பிராந்தியத்தில் முன்னணி நிலைத்தன்மை கண்காட்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஒருநாள் போட்டியில் விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்து உலக சாதனை படைத்தவர் யார்?

விராட் கோலி ஒருநாள் போட்டியில் விரைவாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார். 205 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் 259 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்கள் கடந்ததே சாதனையாக இருந்தது.

“மே நஹி ஹம்” (நான் அல்ல நாம்) என்ற இணையப்பக்கம் மற்றும் செயலி எதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது?

• “மே நஹி ஹம்” (நான் அல்ல நாம்) என்ற இணையப்பக்கம் மற்றும் செயலியை பிரதமர் திரு. நரேந்திர மோடி புது தில்லியில் துவக்கிவைத்தார். “பொதுசேவையில் நான்” என்ற மையப்பொருளுடன் செயல்படவிருக்கும் இந்த இணையப்பக்கம் தகவல் தொழில்நுட்ப துறைகளில் ஈடுபட்டிருப்போர் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர்களின் முயற்சிகளை சமூக நோக்கங்கள், சமூக சேவை என்ற ஒரே தளத்திற்கு கொண்டுவர இது உதவும்.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் ஜூலை to செப்டம்பர் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here