நடப்பு நிகழ்வுகள் QUIZ மே 9 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ  மே 9 2019

நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா  Video கிளிக்செய்யவும்

ஐக்கிய நாடுகள் நிதியுதவியுடன் கர்நாடக மாநிலத்தில் எந்த நகரம் ஒரு 'நிலையான நகரமாக' உருவாக உள்ளது?

ஐக்கிய நாடுகளின் தொழில்துறை வளர்ச்சி அமைப்பு (UNIDO) 'நிலையான நகரங்கள்' எனும் ஒருங்கிணைந்த அணுகுமுறை திட்டத்தின் ஒரு பகுதியாக பைலட் நகரங்களில் ஒன்றாக மைசூரு நகரத்தை அடையாளம் கண்டுள்ளது.

இந்தியாவின் புதிய பிட் வைப்பர் பாம்பு எந்த மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது ?

இந்தியாவின் புதிய பிட் வைப்பர் பாம்பு அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது

மெட்ரோ ரயிலின் மதிப்பை ஊக்கப்படுத்தியதற்காக எந்த மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு 'தங்கப்பதக்கம்' வழங்கப்பட்டுள்ளது?

உலக அளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பொருளாதார ஆய்வு நிறுவனம் (IES) மற்றும் இந்தியாவில் உள்ள L&T மெட்ரோ ரெயில் (ஹைதராபாத்) லிமிடெட்டிற்கு மெட்ரோ ரயிலின் மதிப்பை ஊக்கப்படுத்தியதற்காக 'தங்கப்பதக்கம்' வழங்கப்பட்டுள்ளது.

KAJU இந்தியா 2019, அனைத்து இந்திய முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் கூட்டம் எங்கு நடைபெற்றது ?

புது தில்லியில் நடைபெற்ற KAJU இந்தியா 2019, அனைத்து இந்திய முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் கூட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மிக அதிக மதிப்பு மிக்க தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதற்காக KSCDC நிறுவனம் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எந்த ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் 'இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட' நுண்செயலியை உருவாக்கியுள்ளனர்?

இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி பாம்பே) பொறியியலாளர்கள் AJIT என்றழைக்கப்படும் ஒரு நுண்செயலியை உருவாக்கியுள்ளனர்.

ஜெட் ஏர்வேஸின் அலுவலக இடத்தை எந்த வங்கி ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது ?

அடமான கடன் வழங்கும் வீட்டுவசதி மேம்பாட்டு நிதிக் கழகம் (எச்டிஎஃப்சி), கடனை திரும்ப செலுத்தாததால் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் அலுவலக இடத்தை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது.

ஆற்றல் பயன்பாட்டிற்காக PCRA உடன் எந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது ?

விவசாயத்தில் ஆற்றல் பயன்பாட்டை திறம்பட பயன்படுத்துவதற்காக TAFE (டிராக்ட்டர்கள் மற்றும் பண்ணை உபகரண லிமிடெட்) மற்றும் பெட்ரோலிய பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கம் (PCRA) இடையே ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.

பி.சி.சி.ஐயின், '' வருடாந்திர உள்ளூர் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கூட்டம்'' எங்கு நடைபெறவுள்ளது ?

மும்பையில் நடைபெற உள்ள மே 17 கூட்டத்தின் போது, சமீபத்தில் நிறைவடைந்த உள்ளூர் விளையாட்டு போட்டியை மதிப்பீடு செய்வதற்காக பெண்களின் மாநிலக் குழுக்களின் கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள், ஆண் சகாக்களுடன் இணைய உள்ளனர்.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here