நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 21, 2018
ஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – பதிவிறக்கம் செய்ய
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்
நரேந்திர மோடி.இந்தியா உதவியுடன் இலங்கையில் எந்த சேவைதொடங்கி வைத்தார்.
இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை மாலை தொடங்கி வைத்தார்.
உலக தடகள ஜூனியர் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை
இந்தியாவின் தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உலக தடகள ஜூனியர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.இதன் மூலம் உலக தடகள ஜூனியர் பிரிவில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமை ஹிமா தாஸுக்கு கிடைத்துள்ளது.அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமாவின் தந்தை ஒரு விவசாயி ஆவார்.பின்லாந்தில் உலக ஜூனியர் தடகளப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயப் பிரிவின் இறுதிப் போட்டியில் 18 வயதான இந்தியாவின் ஹிமா தாஸ் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
தமிழக அரசு, பிளாஸ்டிக் தடை சட்டத்தை ---------------ஆண்டு ஜனவரி முதல் அமல்படுத்தவுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகளைத் தடுக்கும் வகையில் 2019 ஜனவரி 1 முதல் பால், தயிர், எண்ணெய் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி, இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், தட்டுகள், தேநீர்/ தண்ணீர்க் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட பொருட்களைத் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தமிழக அரசு தடை செய்வதாக அறிவித்துள்ளது.
சமீபத்தில்எந்த இடத்திலிருந்து பிரமோஸ் சூப்பர்சோனிக்ஏவுகணை சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள சாந்திப்பூர் கடல்பகுதியில் பிரமோஸ் சூப்பர்சோனிக்ஏவுகணை சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது. இது ஒலியயை விட 2-மடங்கு வேகமாக செல்லும்.
கவிஞர் கோபால் தாஸ் நீராஜ் காலமானார்.அவர் எந்த மொழியின் கவிஞர்
எதிர்வரும் 18 ஆசிய விளையாட்டு போட்டியில் யார் நியமிக்கப்பட்டனர்
இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI) 18 ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான போட்டியாக பிரிஜ்ஜிபுஷன் சரண் அவர் இருப்பார் என்று உறுதி செய்தது .
எந்த நாடு 68 வது உறுப்பினராக சர்வதேச சூரிய ஒற்றுமை (ISA) ஆள் தேர்ந்து எடுக்க பட்டது
வதந்திகளை சரிபார்க்க டிஜிட்டல் தன்னார்வலர் பிரச்சாரத்தை எந்த மாநில போலீஸ் அறிமுகப்படுத்துகிறது
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்