நடப்பு நிகழ்வுகள் Quiz- ஏப்ரல் 23 2018

0
307

நடப்பு நிகழ்வுகள் Quiz- ஏப்ரல் 23 2018

1. புத்தக தினம் என்று கொண்டாடப்படுகிறது?

புத்தக தினம் (ஏப்ரல் 23) அன்று கொண்டாடப்படுகிறது. உலக புத்தக தினத்தை சிறப்பிக்கும் வகையில் வாசிப்புப் பழக்கத்தை விசாலப்படுத்துவதற்காகவும் வாசகர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு பல்வேறு பதிப்பகங்கள் 20 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளன.

2. பிரதமர் தேசிய கிராம சுயாட்சி இயக்கத்தை தொடங்கி வைத்தார் ?

பிரதமர் திரு. நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், தேசிய கிராம சுயாட்சி இயக்கத்தை (ராஷ்ட்ரீய கிராமின் ஸ்வராஜ் அபியான்) தொடங்கி வைக்கிறார்.

3. தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24 அன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்லாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், தேசிய கிராம சுயாட்சி இயக்கத்தை (ராஷ்ட்ரீய கிராமின் ஸ்வராஜ் அபியான்) தொடங்கி வைக்கிறார்.

4. கைலாஷ் மானசரோவர் யாத்திரையை ________ வழியே மீண்டும் தொடங்க இந்தியாவும் சீனாவும் முடிவு செய்துள்ளன

கைலாஷ் மானசரோவர் யாத்திரையை நாதுலா கணவாய் வழியே மீண்டும் தொடங்க இந்தியாவும் சீனாவும் முடிவு செய்துள்ளன.மானசரோவர் யாத்திரை ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை உத்தராகண்ட் மாநிலம் லிபுலெக் கணவாய் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் இருந்து நாது லா கணவாய் வழியாக இரு வழிகளில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படும். பேச்சுவார்த்தைக்குப் பின் கடந்த ஜூன் 28-ம் தேதி இரு நாட்டு படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன.

5. 100 சதவீதம் எரிசக்தியைப் பயன்படுத்தும் முதலாவது நகரம் எது ?

டையூ: 100 சதவீதம் எரிசக்தியைப் பயன்படுத்தும் முதலாவது நகரம். மற்ற நகரங்கள் தூய்மையாகவும்,பசுமையாகவும் மாறுவதற்கான புதிய அடையாளமாக டையூ, பகல் நேரத்தில் 100 சதவீதம் புதுப்பிக்கவல்ல எரிசக்தியைப் பயன்படுத்தும் முதலாவது பொலிவுறு நகரமாகிறது. டையூ ஒவ்வோர் ஆண்டும் சுமார்13,000டன் கரியமில வாயு வெளியேற்றத்தைத் தவிர்க்கிறது. குறைந்த செலவிலான சூரிய எரிசக்தி காரணமாக, குடியிருப்புப் பிரிவுகளில் மின்கட்டணம் சென்ற ஆண்டு 10% அளவிற்கும், இந்த ஆண்டு 15%அளவிற்கும் குறைந்துள்ளது.

6. வீரதீர செயல்கள் மற்றும் மகத்தான சேவைகளுக்கான விருதுகள் வழங்கியது யார் ?

வீரதீர செயல்கள் மற்றும் மகத்தான சேவைகளுக்கான விருதுகள் மற்றும் பதக்கங்களை குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் மாளிகையில் (ஏப்ரல் 23, 2018) நடைபெற்ற பாதுகாப்புத் துறை கவுரவ விருது விழாவில் வழங்கினார்.

7. முதலாவது சர்வதேச சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (SME) மாநாடு எங்கு நடைபெற்றது ?

புதுதில்லியில் 2018 ஏப்ரல் 22 தொடங்கி 24 வரை நடைபெறும் முதலாவது சர்வதேச சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (SME) மாநாட்டில் 37 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாடு அனைத்து துறைகளுக்கும் இடையே ஒரு பாலமாக விளங்கும் என்றும் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் மக்களின் பங்களிப்பைப் பயன்படுத்த இந்தியாவிற்கு உதவும் என்றும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு. கிரிராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.

8. இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் சிறந்த வீரருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டது ?

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருதை லிவர்பூல் முகமது சாலா பெற்றுள்ளார்.

9. தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் எங்கு நடைபெறுகிறது ?

தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நேபாளத்தின் காத்மண்டு நகரில் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா 10 தங்கப் பதக்கங்கள் வென்று முதலிடம் பிடித்துள்ளது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் 7 தங்கப்பதக்கங்களும், ஆண்கள் ஒற்றையர் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்களும் வென்றுள்ளது. மொத்தத்தில் 10 தங்கம், 3 வெண்கலம் உட்பட 13 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

10. இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் சிறந்த வீரருக்கான விருது வாங்கியவர் எந்த நாட்டை சேர்ந்தவர் ?

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருதை லிவர்பூல் முகமது சாலா பெற்றுள்ளார். இந்த விருது வாங்கும் முதல் எகிப்தியர் ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here