நடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 11 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 11 2019

உலக புனரமைப்பு மாநாடு எங்கு நடைபெற உள்ளது?

2019 மே 13 மற்றும் 14, ஜெனீவாவில் நடைபெறும் நான்காவது உலக புனரமைப்பு மாநாட்டில் (WRC) 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அதனை சீர்படுத்த தொடங்கப்பட்ட மீளமைப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கை இடம்பெறவுள்ளது.

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக தொடர்ந்து எத்தனை முறை விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்?

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கோலிக்கு உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டவர் யார்?

விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் 2019 ஆம் ஆண்டு பதிப்பின் “ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதுகளை” இந்தியாவின் கோலி மற்றும் ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளனர்.

டி 20 கிரிக்கெட்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டவர் யார்?

இரண்டாவது முறையாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் டி 20 கிரிக்கெட்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எந்த நாட்டின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் வானவியல் வல்லுநர்கள் முதல் கருந்துளை புகைப்படத்தை வெளியிட்டனர்?

அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் வானவியல் வல்லுநர்கள் முதல் கருந்துளை புகைப்படத்தை வெளியிட்டனர். கருந்துளை என்பது பிரபஞ்சம் முழுவதும் சிதறி, பரவியிருக்கும் விண்மீன்களில் ஒன்றாகும் மற்றும் இது துல்லியமற்ற புவி ஈர்ப்பு கேடயங்கள் மூலம் மறைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

2019ம் ஆண்டிற்கான கடற்படை முதலீட்டு விழா எங்கு நடைபெற்றது?

2019ம் ஆண்டிற்கான கடற்படை முதலீட்டு விழா மும்பையின் மேற்கு கடற்படையின் (WNC) ஹெலிகாப்டர் கப்பல் தளமான ஐஎன்எஸ் ஷிக்ராவில் நடைபெற்றது.

‘சிறந்த பசுமை நடைமுறைக்கான CNS டிராபி’ எதற்கு வழங்கப்பட்டது?

விழாவில் கடற்படை டாக்யார்ட் (வைசாக்) மற்றும் ஐஎன்எஸ் துவார்கா ஆகியவையின் பசுமை சுற்றுச்சூழல் முயற்சிகளுக்காக ‘சிறந்த பசுமை நடைமுறைக்கான சிஎன்எஸ் டிராபி’ வழங்கப்பட்டது.

மன்பிரீத் கவுர் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

தேசிய ஊக்க மருந்து ஏஜென்சி ஒழுங்குமுறை குழு, ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக குண்டு எறிதலில் ஆசிய சாம்பியனான மன்பிரீத் கவுருக்கு நான்கு வருடம் விளையாட தடை விதித்துள்ளது.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

ஏப்ரல் 12 நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா  Videoகிளிக்செய்யவும்

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here