ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 07,08 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 07,08 2018

அக்டோபர் 8 – இந்திய விமானப்படை 86 வது ஆண்டு நிறைவு விழா

அக்டோபர் 8 – அந்தமான் மற்றும் நிக்கோபார் கமாண்டின் 18 வது நிறைவு தின கொண்டாட்டம்

  • ரெட் பட்டன் பொது ரோபாட் ஸ்பெக்ட்ரம் (RBPRS) அறிவார்ந்த ரோபோ முனையம் கேரளம் செரத்தலில் இரு இடங்களில் நிறுவப்படும்.
  • நாகலாந்து காந்தி என்றழைக்கப்படும் நட்வர் தக்கர் இறந்தார்.
  • சிமென்ஸின் சிறப்பு மையம் வாராங்கல் தேசிய தொழில்நுட்ப நிறுவன (NIT) வளாகத்தில் ரூ .10 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.
  • WHO-UNICEF பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஏமனில், காலராவிற்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டது.
  • வெப்பமண்டல புயல் “மைக்கேல்” அமெரிக்க வளைகுடா கடற்கரைக்கு கடுமையான மழைப்பொழிவுகளை கொண்டுவரக்கூடும் எனக்கணிப்பு.
  • நீரை மாசுபடுத்துபவைகளை பிடிக்க சிறிய கோளங்கள்கண்டுபிடிப்பு
  • 2018 ஆம் ஆண்டு இந்தியா திறன் போட்டி புது தில்லியில் நடைபெற்றது.
  • பிரட் கவாநாக்அமெரிக்க உச்ச நீதி மன்றத்தின் 114 வது நீதிபதி
  • அருணாச்சல பிரதேச அரசு முதலமைச்சரின் சஷக்த் கிசான் திட்டம் மற்றும் முதலமைச்சரின் கிருஷி சமுஹ் திட்டம் அறிமுகம்.
  • ஜப்பான் மற்றும் இந்தியா இடையேயான இருதரப்பு கடல்சார் பயிற்சி (JIMEX 18) விசாகப்பட்டினத்தில் துவங்குகிறது.
  • பொருளாதார அறிவியலுக்கான 2018 நோபல் பரிசு – வில்லியம் டி. நோர்தாஸ் [அமெரிக்கா] & பால் எம். ரோமர் [அமெரிக்கா]
  • குடிமக்களுக்கான சிவிஜில்‘ [‘CVigil’] மொபைல் செயலியை விரைவில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு பயன்படுத்த திட்டம்.
  • இலங்கையை தோற்கடித்து இந்திய U-19 ஆசிய கோப்பையை வென்றது.
  • இந்தியாவின் கீர்த்தனா பாண்டியன் ஐபிஎஸ்எஃப் உலக U-16 ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் பட்டத்தை வென்றார்.
  • இந்தியாவின் பிரீமியர் சைக்ளோத்தான் 40 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் டெபோரா ஹெரால்ட் தங்கப் பதக்கத்தை வென்றார். ஆண்கள் 50 கிலோ மீட்டர் பிரிவில் ஸ்ரீதர் சாவனுர் வென்றார்.
  • சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கி தனது 30 வது WTA ஒற்றையர் பட்டத்தை வென்றார்.

இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுகள்

  • ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் துப்பாக்கி சுடும் வீரர் துஷர் மேனே வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
  • தங்ஜம் தபாபி தேவி வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் முதல் ஒலிம்பிக் அளவிலான ஜூடோ போட்டியில் பதக்கத்தைப் பெற்றார்.

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

  • ஆண்கள் பேட்மின்டன் அணி வெண்கலத்தை வென்றது.
  • ஆண்களுக்கான 49 கிலோ பவர் பளுதூக்கும் போட்டி – பர்மன் பாசா ​​வெள்ளிப்பதக்கமும், பரம்ஜித் குமார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
  • பெண்கள் 100 மீட்டர் பட்டர்ஃப்ளை பிரிவில்[நீச்சல்] தேவன்ஷி சதிஜா வெள்ளி வென்றார், ஆண்கள் 200 மீட்டர் தனி நபர் மெட்லே பிரிவில் சுயாஷ் ஜாதவ் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
  • சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா தலைமையிலான இந்திய அணி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட்டில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் களமிறங்குகின்றனர்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!